Tuesday, December 27, 2011

கணனியும் கிருஸ்தவமும் ஒரு ஒப்பீடு

தற்பொழுது கணனி இன்றியமையாத பொருள்
அதனுடன் கிருஸ்தவர் எப்படி பொருந்துகின்றனர்
உள்ளே.......


கணனியின் பாகங்கள்                       கிருஸ்தவம்

 

 
  1. பவர் சப்ளை (smps)                                பிதா
  2. பிராசசர்                                                  இயேசு
  3. மதர்போர்டு                                             பரிசுத்தாவி
  4. ராம்                                                       சபை                                     
  5. ஹார்டிஸ்க்                                             மனிதன்
  6. கீபோட்                                                   சுவிஷேசம்
  7. மவுஸ்                                                   வேதாகமம்
  8. சிடி பிளாபி டிரைவ்                                  சுவிஷேசம் இரட்சிப்பு ஆராதனை
  9. ஆப்பரேட்டிங் சிஸ்டம்                              ஆத்துமா
  10. சாப்டுவேர்                                               பிரசங்கங்கள்
  11. வைரஸ்                                                  சாத்தான்
  12. பிரின்டர்                                                 ஆவியின் கனிகள்
  13. ஸ்கேனர்                                                இயேசுவை பிரதிபளிப்பது
  14. மானிட்டர்                                               சமூகம்
  15. ஸ்பீக்கர்                                               ஊழியம்

    கணனி எப்படி இயங்குகின்றதோ அதேபோன்று தான் கிருஸ்தவமும் இயங்குகிறது
  1. கணனிக்கு மிகமிக அவசியமான ஒன்று(SMPS) பவர் சப்ளை இது இல்லாவிட்டால் கணனி இயங்கவே முடியாது அவ்வாறாக இருப்பவர் பிதா
  2. பிராசசர் இது கணனியின் அனைத்துபகுதியையும் கட்டுபடுத்தும் மிகவும் முக்கிய பகுதி, அனைத்தையும் இயக்குவது இதுதான் இப்படியாக இருப்பவர் இயேசு
  3. மதர்போர்டு அனைத்து செயல்பாடுகளும் இதன் மூலமாக தான் நடத்தப்படுகிறது அல்லது பரிமாற்றம் செய்யபப்படுகிறது  இதுவும் அவசியமான ஒன்று இப்படியாக செயல்படுபவர் பரிசுத்தாவி
  4. ராம் இது தேவைக்கு எற்ப  மாறி இருக்கும் 128, 512 தற்பெழுது இன்னும் அதிகமாக உள்ளது இது கணனியின் தற்காலிக நினைவகம் காபி பெஸ்ட் செய்யபடுவது இதன் மூலமாகதான் இப்படி இருப்பது சபைகள்
  5. கணனியில் மிகவும் முக்கிய பகுதி ஹார்டிஸ்க் இதில்தான் நாம் அனைவரும் தகவல்களை சேமித்து வைக்கிறோம் மனிதனும் அந்த நிலையில்தான் செயல்படுகிறான்
  6. கீபோர்ட் மூலமாக அனைத்து தகவலும் தட்டச்சு செய்யப்படுகிறது அது போன்று மனிதனுக்கு சுவிஷேசம்மூலம் இரட்சிப்பின் தகவல் உள்செல்கிறது
  7. மவுஸ் என்பது  கம்பியூட்டரில் சுட்டுவதற்காக பயன்படுத்தபடுகிறது அது போன்று மனிதனின் அவல நிலைகளை சுட்டிகாட்டுகிறது வேதாகமம்
  8. சிடி பிளாபி டிரைவ் இவை கம்பியூட்டரில் தகவல் பரிமாற்றம் செய்ய பயன்படுத்தபடுகிறது இது போன்று சுவிசேசம் இரட்சிப்பு ஆராதனை விசுவாசம்... இவை மனிதனுக்கு ஆத்தும வளர்ச்சிபரிமாற்றத்தை தருகிறது
  9. ஆப்பரேட்டிங் சிஸ்டம் வின்டோஸ் 3.1 தொடங்கி 95 98 ME 2000 XP தற்பொழுது வின்டோஸ் வெஸ்ரா வரை வந்துள்ளது இது தவிர லினக்ஸ் மாக்.. போன்றவைகளும் உள்ளது இதன் மூலமாக தான் கம்பியூட்டரை பயன்படுத்த முடியும் இது மனிதனின் ஆத்துமா மற்றும் ஆத்தும வளர்ச்சியை குறிக்கும்
  10. சாப்டுவேர் நம் தேவைக்கு ஏற்ப உபயோகபடுத்தபடும் மென்பெருட்கள் இவை நமது தகவல்களை மெருகூட்டகூடியது இவ்வாறு நம் ஆத்தும வளர்ச்சிக்கு தேவைக்கு ஏற்ப பிரசங்கங்கள் நமக்கு அளிக்கபடுகிறது
  11. வைரஸ் இது நமது கம்பியூட்டரில் உள்ள அனைத்து தகவலையும் அழிக்கும் சில வைரஸ் ஹார்டிஸ்கை தாக்கி முற்றிலும் தகவல் இல்லாதவாறு செய்து விடும் அதனால் ஆண்டிவைரஸ் பயன்படுத்த வேண்டும் அதுவும் அவ்வப்போது அப்டேட் செய்ய வேன்டும் இதே போன்று தான் சாத்தான் நம்மை முற்றிலும் அழித்துவிடா வன்னம் காக்க ஜெபம் என்னும் ஆன்டிவைரஸ்சை அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும்
  12. பிரின்டர் நமது தகவல்களை அப்படியே வெளிபடுத்தி காட்டகூடியவை இதை போன்று நமது வாழ்வில் உள்ள ஆவியின் கனிகள் பிறருக்கு வெளிபடுத்தபடவேண்டும்
  13. ஸ்கேனர் நாம் கொடுக்கும் தகவல்களை அதாவது புகைபடம் அல்லது கடிதங்கள்  அப்படியே எடுத்து காட்டுவது அல்லது பிரதிபளிப்பது இவ்வாறு நாமும் இயேசுவின் அன்பை, குணங்களை பிரதிபளிக்கவேண்டும்
  14. மானிட்டர் (cpu)கம்பியூட்டரில் நடைபெறும் அனைத்தையும் நமது கண்களுக்கு பிரதிபளிக்க கூடியது இவ்வாறு நாம் கிருஸ்துவுடன் வாழும் வாழ்க்கையை சமூகத்தின் மூலம் பிரதிபளிக்கபடும்
  15. ஸ்பீக்கர் நாம் வைத்துள்ள (mp3 or more..)தகவல்களை ஒலியின் முலம் வெளிபடுத்தும் இவ்வாறு நாமும் நாம் பெற்ற இன்பம் இயேசுவை பெருக இவ்வையகம் என்று ஊழியம்செய்து வெளிபடுத்த வேன்டும்

ஈரானில் இஸ்லாமிய இமாம்


ஈரானில் இஸ்லாமிய இமாம் தொலைக்காட்சி மூலம் இயேசுவை ஏற்றுக்கொண்டதால் நாட்டை விட்டு வெளியேறவேண்டியதாயிற்று.
(இன்னும் நான்கு இமாம்கள் விசுவாசிகளாக உள்ளனர்)
(வார்த்தைக்கு வார்த்தை சரியான மொழிபெயர்ப்பு அல்ல,)
மார்க் எல்லீஸ்


துல்சா ஓக்லஹோமா
- இவர் ஈரானில் ஒரு உயர் மட்ட இஸ்லாமிய தலைவர் .இயேசுவை ஏற்றுகொண்ட பிறகு சிறைதண்டணையும்,கொலைமிரட்டள்களையும் சந்தித்தபின்ன்னர் நாட்டை விட்டு வெளியேறினார் .அமேரிக்காவில் வசித்து வரும் ஈரானிய போதகர் இத்தகவலை தெரிவிக்கிறார்.

TBN NAJAT TV

மூலம் ஒளிபரப்பபட்ட நிகழ்சிகளை இந்த இமாம் பார்த்தார் என்று HARWEST WORLD OUT REACH உடைய ஸ்தாபகரும்,தலவருமான REZA SAFA கூறுகிறார்.TBN NAJAT TV தான் பெர்சிய மொழியில் ஒளிபரப்பப்படும் முதல் கிறிஸ்தாவ சேனல் ஆகும்.ஈரான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் 24/7-ல் ஒளிபரப்பாகின்றது.
இமாம்

,பிப்ரவரி மாதத்தில் TBN NAJAT TV யின் தொலைபேசி ஆலோசகர்களை அழைத்து,தான் இயேசுவை ஏற்றுக்கொள்ளுவதற்காக ஜெபிக்கும் படி கேட்டுக்கொண்டார்.

REZA SAFA கூறியதாவது" இமாம் கடந்த இரண்டு வருடங்களாக நம்முடைய நிகழ்ச்சிகளை பார்த்து வருகிறார்"அவர் பார்க்க ஆரம்பித்த பொழுதே விசுவாசிக்க தொடங்கினார் ,ஆனால் அவருடைய அறிக்கை மூலமாக அவரது இரட்சிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
"

இந்த மனிதர் குரானின் ஒவ்வொரு வசனங்களையும் கற்றறிந்தவர்" நம்முடைய நிகழ்ச்சிகளை பார்க்க தொடங்கியதில் இருந்து அவருக்கு இஸ்லாமிய நம்பிக்கை குறித்து சந்தேகம் எழும்பியது.இஸ்லாமிய தீவிரவாதத்தை குறித்து கேள்வி எழுப்பியதன் நிமித்தம் இவர் 9 மாதங்கள் சிறை தண்டணை அனுபவித்தார்."சிறையில் இருந்து விடுதலையான பின்பு எண்ணற்ற கொலைமிரட்டல்களை சந்தித்ததினால் நாட்டை விட்டு வெளியேறினார் .
இன்னும் அநேக இமாம்கள் அவருடைய நிலைமையிலேயே உள்ளனர்

."நல்ல உயர்ந்த மதிப்பில் உள்ள நான்கு இமாம்கள் அவருக்கு தெரியும் . அவர்களும் அவருடைய நிலையில் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்"
"

இந்த இமாம் எல்லாவற்றையும் விட்டு விட்டு வெளியேறினார்." அவருடைய அமைப்பபில் அவருக்கு மாதம் 700000 சம்பளம் பெற்று வந்தார் .அவர் எல்லோராலும் கௌரவமாக மதிக்கப்பட்டுவந்தார்.ஆனால் சுவிஷேசம் அவருக்குள் வந்தவுடன் அவர் கிறிஸ்துவுக்காக எல்லாவற்றையும் இழந்தார் .இப்பொழுது அவர் வெளிநாட்டில் ஓர் ஏழை அகதியாக உள்ளார் ".
"

தேவன் ஈரானில் இஸ்லாமிய அஸ்திபாரங்களை அசைத்துவருகிறார், அநேக அரசு அதிகாரிகள் சந்திக்கப்படவேண்டும் என்று ஜெபித்து வருகிறோம்.தேவனும் பதில் கொடுத்து வருகிறார். இன்னுகதவுகளை திறக்கும்படி ஜெப்யுங்கள்"என்று REZA SAFA கூறுகிறார். [/quote]
http://www.spcm.org/Journal/spip.php?article7247

Friday, December 16, 2011

Useful Website in Tamil

கன்னிப் பிறப்பு கற்பனையா?

புதிய ஏற்பாட்டில் மத்தேயு 1:16-25 இலும் லூக்கா 1:26-38 இலும் இவ்வுபதேசம் நேரடியாக குறிப்பிடப்பட்டுள்ளது. “இயேசுகிறிஸ்து பிறக்கும்வரை, யோசேப்பு மரியாளை அறியாதிருந்தான்“ என கூறும் மத்தேயு (1:25) 'இருவரும் கூடிவரும் முன்பே மரியாள் பரிசுதத ஆவியினால் கர்ப்பவதியானாள்“ (1:18) என்று அறியத்தருகிறார். இச்சம்பவம் நடைபெற்றபோது மரியாள் கன்னிப் பெண்ணாகவே இருந்தாள் என்பதை லூக்காவும் உறுதிப்படுத்தியுள்ளார். (1:26-38) “பரிசுத்தஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் குழந்தை பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் எனப்படும் என கன்னிப் பெண்ணான மரியாளிடம் கூறிய தேவதூதன் (லூக். 1:35) தான் அறியாமலேயே அவள் கர்ப்பவதியாயிருப்பதனால் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்த யோசேப்பிடம் “அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது“ என அறிவித்தான் (மத். 1:20) 

இயேசுவின் கன்னிப் பிறப்பைப் பற்றி அதாவது, கன்னிப் பெண்ணான மரியாள் கருத்தரித்து இயேசுவெனும் தெய்வீகக் குழந்தையைப் பெற்றெடுத்ததைப் பற்றி மத்தேயுவும் லூககாவும் குறிப்பிட்டுள்ள விடயங்கள் நம்பகமானவை என்பதி்ல் எதுவித சந்தேகங்களுமில்லை. இவை சரி்த்திர பூர்வமான ஆதாரக் குறிப்புகளினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இச்சம்பவம் எரோது ராஜாவின் நாட்களில் நடைபெற்றதாக மத்தேயு அறியத்தருகிறார். (2:1) சீரிய நாட்டில் சிரேனியு என்பவன் தேசாதிபதியியாக இருந்த போது, முதலாம் குடிமதிப்பு எழுதப்பட்ட வேண்டுமென அகுஸ்துராயனால் கட்டளை பிறப்பிக்கப்பட்ட காலத்திலேயே இயேசு பிறந்தாரென லூக்கா மற்றுமொரு சரித்திர பூர்வமான ஆதாரத்தைத் தருகிறார். (2:1-6) சரித்திராசிரியராகவும், வைத்தியராகவும் இருந்த லூக்கா தான் முழுநிச்சியமாய் நம்புகின்ற சங்கதிகளை ஆரம்பமுதல் கண்ணாரக் கண்டு வசனத்தைப் போதித்தவர்கள் தங்களுக்கு ஒப்புவித்தபடியே அவைகளைக் குறி்த்து சரித்திரம் எழுத அநேகம் பேர் ஏவப்பட்டபடியினால் ஆதிமுதல் எல்லாவற்றையும் விசாரித்தறிந்து எழுதியுள்ளமை (1:1-4) அவருடைய நூல் நம்பகமான என்பதை உறுதிப்படுத்துகின்றது. 

மத்தேயுவும் லூக்காவும் கன்னிப்பிறப்பு உபதேசத்திற்கு போதுமான ஆதாரங்களை தந்தாலும் கூட, அவர்களுடைய குறிப்புகளில் ஒருசில் அம்சங்கள் சற்று தெளிவற்றது போல காணப்படுகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. எனினும் அவை எவ்வகையிலேனும் கன்னிப்பிறப்பு உபதேசத்தைப் பொய்யாக்கிவிடவில்லை. இவ்வுபதேசத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் மட்டுமே, .இதை காரணம் காட்டி கன்னிப்பிறப்பு நம்பக்கூடியதொன்றல்ல என வாதிடுகி்ன்றனர். எனவே தெளிவற்றதுபோல தென்படும் பகுதிகளை நாம் சரிவர விளங்கிக் கொள்ள வேண்டும். அப்போது மட்டுமே இவ்வுபதேசத்தை எதிர்ப்பவர்களுக்கு தகுந்த பதில்களைக் கொடுப்பது இலகுவானதாயிருக்கும்.

மரியாள் கன்னிப் பெண்ணாக இருக்கும்போதே பரிசுத்தவாயினால் கர்ப்பவதியானாள் (1:18-20) யோசேப்புடன் எவ்வித தாம்பத்திய உறவும் ஏற்படவில்லை (1:25) என நேரடியாக குறி்ப்பிட்டிருந்தபோதிலும் இருவருக்கும் இடையிலான உறவுமுறை முன்னுக்குப் பின் முரணான விதத்தில் குறிப்பிட்டுள்ளது போல் தென்படுகின்றது. 1:18 'யோசேப்பு மரியாளுக்குப் புருஷனாக நியமிக்கப்டப்டிருந்தவன்“ என அறியத் தருகையில், அடுத்தஅவனம் இதை மறுத்து, யோசேப்பு மரியாளின் புருஷன்“ (1:19) என கூறுவதோடு “மரியாள் யோசேப்பின் மனைவி“ என்றும் தெரிவி்ககின்றது. (1:20) மட்டுமல்ல. 1:19 இல் யேசேப்பு மரியாளை தள்ளிவிட (விவாகரத்து செய்ய) மனதாயிருந்தான் என்றும் காணக்கிறோம். மரியாள் கர்ப்பவதியாயிருக்கும்போது, அவளுக்கும் யோசேப்புக்கும் இடையிலிருந்த உறவுமுறை இரண்டுவிதமாக அதாவது, நிச்சயதார்த்தம் செய்து கொண்டவர்களாகவும், திருமணம் முடித்த கணவன்-மனைவியாகவும் குறிப்பிடப்பட்டுள்ளமை, மரியாள் உண்மையிலேயே கன்னிப் பெண்ணாகத் தான் இருந்தாளா இல்லையா என்பதை நிச்சயமாக அறிந்து கொள்ள முடியாதுள்ளது என வாதிடுவோரும் நம்மத்தியில் உள்ளனர். இயேசு யோசேப்புக்கு பிறந்த பிள்ளையாயிருக்கலாம் எனும் சந்தேகத்தை இது தோற்றுவிப்பதாக உள்ளது. என்று அவர்கள் கருதுகின்றனர்.

மரியாளுக்கும் யோசேப்புக்கும் இடையிலான உறவுமுறை இரண்டுவிதமாக மத்தேயுவினால் குறிப்பிடப்பட்டிருப்பது உண்மையேயானும் இதை வைத்துக் கொண்டு, இயேசு பிறக்கும்பரை மரியாள் கன்னிப் பெண்ணாயிருக்கவில்லை, இயேசு யோசேப்புக்குப் பிறந்த குமாரன் என வாதிட்டால், 18ம், 25ம் வசனங்களுக்கு எவ்விதான விளக்கங்களைக் கொடுக்க முடியும்? இவையிரண்டும் கனனிப்பிறப்பு உபதேசததை நேரடியாக போதிக்கின்றது. எனவே உறவுமுறை வித்தியாசமான முறைகளில் குறிப்பிடப்பட்டிருப்பதற்கு வேறு காரணங்கள் இருந்திருக்க வேண்டும். பாலஸ்தீன கலாச்சாரத்தில் அக்காலத்தில் நடைமுறையிலிருந்த திருமண வைபவ சடங்காச்சார முறைகளே இதற்கான காரணம் என மறைந்த வேத வியாக்கியானி வில்லியம் பாக்ளே அறியத்தருகிறார். “அவர்களது திருமண வைபவம் மூன்று படிமுறைகளைக் கொண்டிருந்தது. தம் பிள்ளைகள் சிறுவர் சிறுமியராயிருக்கும்பேது திருமணப் பொருத்தம் பார்த்து, இன்னார்க்கு இன்னார் என முடிவு செய்வது பெற்றோரின் வழக்கமாயிருந்தது, உரிய காலம்வரும்போது நிச்சயதார்த்தத்தின் மூலம் இது உறுதிப்படுத்தப்படும் இதன் பின் அவர்கள் கணவன் மனைவியாகவே கருதப்பட்டனர். கன்னிவிதவைகள் அக்காலத்தில் பலஸ்தீனாவில் இருக்க இதுவே காரணமாகும். நிச்சியதார்த்தமானது சட்டரீதியாக இருவரையும் இணைப்பதாயிருந்தமையினால், விவாகரத்தின் மூலமே இவ்விணைப்பை முறிக்கக் கூடியதாயிருந்தது. நிச்சியதார்த்தத்தை மேற்கொண்டவர்கள் ஒருவருடத்தின் பின்பே திருமணம் செய்து இல்லற வாழ்வை மேற்கொள்ள ஆரம்பிப்பார்கள்“ என தெரிவிக்கும் வில்லியம் பாக்ளே “மத்தேயு குறிப்பிட்டுள்ள சம்பவங்கள் அனைத்தும் நிச்சியதார்த்தத்திற்குப் பின் நடைபெற்றவைகளாகும். இதனால்தான் மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டவளாகவும், அவனது மனைவியாகவும் குறிப்பிடப்பட்டுள்ளாள். இதனாலேயே யோசேப்பு அவனது புருஷனாகவும், அவளை விவாகரத்து செய்ய சிந்தனையுள்ளனாகவும் இருந்தான் என மத்தேயு எழுதியுள்ளார்.” என கூறுகிறார்.

உண்மையில் நிச்சியதார்த்தத்தின் பின்பு மரியாள் கர்ப்பவதியாயிருப்பதை யோசேப்பு அறிந்திருப்பான். மட்டுமல்ல, அவள் வயிற்றில் வளரும் குழந்தை தன்னுடையதல்ல என்பதனாலேயே அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான். (1:19) இச்சமயத்திலேயே, “மரியாளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்தாவியினால் உண்டானது“ என தேவதூதனால் அவனுக்கு அறிவிக்கப்பட்டது. (1:20) மரியாள் கன்னிப் பெண்ணாகவே இருந்தாள். அவள் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் யோசேப்பு அவளை அறியாதிருந்தான். (1:25) எனினும் அவர்கள் நிச்சியதார்த்தம் செய்துகொண்டிருந்தமையால், அக்கால கலாச்சாரத்தின்படி கணவன்-மனைவியாக இருவரும் சமுதாயத்தினால் கருதப்பட்டமையே உறவு முறைப்பற்றி இரண்டுவிதமாக மத்தேயு எழுத காரணம் என்பதில் சந்தேகமுமில்லை.

மத்தேயுவினுடைய குறிப்பில் இயேசு யோசேப்பின் குமாரன் இல்லை என்பதற்கான இன்னுமொரு ஆதாரத்தை அவர் குறிப்பிட்டுள்ள வம்ச வரலாற்று அட்டவணையில் நாம் காணலாம். 42 பரம்பரைகளைக் கொண்ட இவ்வட்டவணையில் “பெற்றான்“ எனும் பதம் ஒவ்வொரு பரம்பரைக்கும் அதாவது ஒருவன் மற்றவனைப் பெற்றான் என்பதை சுட்டிக்காட்ட உபயோகிக்ப்பட்டதை அவதானித்திடலாம். ஆனால் இயேசுவைப் பற்றி குறிப்பிடும்போது மட்டும் யோசேப்பு அவரைப் பெற்றான் என கூறவில்லை. மாறாக, “மரியாளிடத்தில் கிறிஸ்து எனப்படுகின்ற இயேசு பிறந்தார். (1:16) என எழுதியுள்ளார். யோசேப்பு இயேசுவினுடைய தகப்பன் அல்ல என்பதை கூட்டிக் காட்டவே, இவ்விடத்தில் மட்டும் “பெற்றான்“ எனும் பதம் உபாயோகிக்கப்படவில்லை. மரியாளை இயேசுவின் தாயாக காட்டும் மத்தேயு யோசேப்பை அவருடைய தகப்பனாக காட்டவில்லை. பிறப்பைப் பொறுத்தவரையில் இயேசுவுக்கும் யோசேப்புக்குமிடையில் எவ்விதமான சம்பந்தமுமில்லை. தேவகுமாரனாகிய அவர் மரியாளின் குழந்தை, யோசேப்பின் பிள்ளையல்ல அவர், அவருடைய மாம்சமும், இரத்தமும் மரியாளிடமிருந்து பெறப்பட்டதுயன்றி, யேசேப்புக்கு இதில் எவ்விதமான பங்குமில்லை. ஏனெனில் அவர் கன்னிப் பெண்ணான மரியாளிடத்தில் பிறந்தவர்

கன்னிப் பிறப்பை பற்றிய மத்தேயுவினுடைய குறிப்பில் எவ்விதமான முரண்பாடும் எத்தகைய தெளிவின்மையும் இல்லை என்பதை அறிந்து கொண்டாலும் இதை லூக்காவின் குறிப்புகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இரண்டும் ஒருசில இடங்களில் வித்தியாசப்படுவது போல தென்படுவதை அவதானிக்கலாம். எனினும் இவை இரண்டிற்கும் எவ்வித முரண்பாடும் இல்லை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. மத்தேயு எழுதாமல் விட்டதை லூக்கா எழுதியுள்ளாதே தவிர, மத்தேயு எழுதியற்றை முரண்படுத்தும் விதத்திலோ அல்லது பொய்யாக்கும் விதத்திலோ அவர் எதையும் எழுதவில்லை. இயேசுவினுடைய பிறப்பில் யோசேப்புடன் சம்பந்தப்பட்ட விடயங்களை மத்தேயு எழுதுகையில் லூக்கா, மரியாளுடைய வரலாற்றை எழுதியுள்ளார். இரண்டையும் ஒன்றாக்கும்போது முழுமையான சத்தியத்தை அறிந்துகொளள்க் கூடியதாய் உள்ளது.

நாணயத்தில் 'கிராஸ்'- ஆர்எஸ்எஸ் அலறல்


நமது இந்திய ரிசர்வ் வங்கி புதிதாக வெளியிட்டுள்ள ரூ.2 நாணயத்தின் ஒரு பக்கத்தில் கூட்டல் போன்ற ஒரு அடையாளம் பொறிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரிசர்வ் வங்கி, ஒற்றுமையின் சின்னம் என கூறியுள்ளது. 

ஆனால் சங் பரிவார் அமைப்புகள் இது கிறிஸ்துவர்களின் சிலுவை சின்னம் எனவே இதை திரும்ப பெற வேண்டும் என் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து ஆர்எஸ்எஸ் தலைவர் சுதர்ஷன் இவ்வாறு கூறுகிறார்:-

இந்த நாணயத்தில் சிலுவை பொறிக்க சொன்னது யார், இதன் பின்னணியில் யார் உள்ளனர் என நாட்டு மக்களுக்கு ரிசர்வ் வங்கி தெரிவிக்க வேண்டும்.( நீங்க வழக்கமா சொல்ற மாதிரி இது பின்னாடி போப் தான் இருக்கிறார்ன்னு சொல்ல வேண்டியதுதானே!) கிறிஸ்துவத்தை வளர்ப்பதற்காக தான் இந்த சின்னத்தை பொறித்ததாக ஆர்எஸ்எஸ் கருதுகிறது.(இப்படி எல்லாம் கிறிஸ்துவத்தை வளர்க முடியாதுங்க.) எனவே இந்த ரூ.2 நாணயத்தை திரும்ப பெற வேண்டும் என்றார்.

ஆர்எஸ்எஸ் செய்தி தொடர்பாளர் ராம்மாதவ் கூறுகையில்,

ரோம் நகர பேரரசர் லூயிஸ் வெளியிட்ட நாணயத்தில் இதே போல் சிலுவை அடையாளமும் 4 புள்ளிகளும் இடம்பெற்றிருந்தது. இந்த 4 புள்ளிகள் பைபிளில் உள்ள 4 அதிகாரங்களை குறிப்பதாகும்.(ரெம்ப புசா இருக்கே)

எனவே இந்த நாணயங்களை திரும்ப பெறவேண்டும் என்றார்.

இது என் கருத்து:-

இது வரை நான் அந்த நாணயத்தை பார்க்கவில்லை, இருந்தாலும் கூட்டல் போன்ற அடையாளம் இருப்பதால் அது சிலவை ஆகிவிடாது. இது கூட்டல் + இது சிலுவை ✝ , சிலுவையில் வரும் நேர் கோடு சற்று நிளமாக இருக்கும். நம் மருத்துவர்கள் பயன்படுத்தும் சின்னம்கூட சிலுவை மாதிரி இருக்கும். இதற்கு எல்லாம போராட்டமா, சுதர்ஷன் ஐயா உங்களுக்கு வேறு வேலையே கிடையாதா? போங்க.., போயி... வேண்டாம் எதுக்கு வம்பு.