நமது இந்திய ரிசர்வ் வங்கி புதிதாக வெளியிட்டுள்ள ரூ.2 நாணயத்தின் ஒரு பக்கத்தில் கூட்டல் போன்ற ஒரு அடையாளம் பொறிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரிசர்வ் வங்கி, ஒற்றுமையின் சின்னம் என கூறியுள்ளது.
ஆனால் சங் பரிவார் அமைப்புகள் இது கிறிஸ்துவர்களின் சிலுவை சின்னம் எனவே இதை திரும்ப பெற வேண்டும் என் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து ஆர்எஸ்எஸ் தலைவர் சுதர்ஷன் இவ்வாறு கூறுகிறார்:-
இந்த நாணயத்தில் சிலுவை பொறிக்க சொன்னது யார், இதன் பின்னணியில் யார் உள்ளனர் என நாட்டு மக்களுக்கு ரிசர்வ் வங்கி தெரிவிக்க வேண்டும்.( நீங்க வழக்கமா சொல்ற மாதிரி இது பின்னாடி போப் தான் இருக்கிறார்ன்னு சொல்ல வேண்டியதுதானே!) கிறிஸ்துவத்தை வளர்ப்பதற்காக தான் இந்த சின்னத்தை பொறித்ததாக ஆர்எஸ்எஸ் கருதுகிறது.(இப்படி எல்லாம் கிறிஸ்துவத்தை வளர்க முடியாதுங்க.) எனவே இந்த ரூ.2 நாணயத்தை திரும்ப பெற வேண்டும் என்றார்.
ஆர்எஸ்எஸ் செய்தி தொடர்பாளர் ராம்மாதவ் கூறுகையில்,
ரோம் நகர பேரரசர் லூயிஸ் வெளியிட்ட நாணயத்தில் இதே போல் சிலுவை அடையாளமும் 4 புள்ளிகளும் இடம்பெற்றிருந்தது. இந்த 4 புள்ளிகள் பைபிளில் உள்ள 4 அதிகாரங்களை குறிப்பதாகும்.(ரெம்ப புசா இருக்கே)
எனவே இந்த நாணயங்களை திரும்ப பெறவேண்டும் என்றார்.
இது என் கருத்து:-
இது வரை நான் அந்த நாணயத்தை பார்க்கவில்லை, இருந்தாலும் கூட்டல் போன்ற அடையாளம் இருப்பதால் அது சிலவை ஆகிவிடாது. இது கூட்டல் + இது சிலுவை ✝ , சிலுவையில் வரும் நேர் கோடு சற்று நிளமாக இருக்கும். நம் மருத்துவர்கள் பயன்படுத்தும் சின்னம்கூட சிலுவை மாதிரி இருக்கும். இதற்கு எல்லாம போராட்டமா, சுதர்ஷன் ஐயா உங்களுக்கு வேறு வேலையே கிடையாதா? போங்க.., போயி... வேண்டாம் எதுக்கு வம்பு.
No comments:
Post a Comment