Friday, December 11, 2015

மாற்கு

மாற்கு 🌹

☀ மூல மொழியாகிய கிரேக்கத்தில் இப்புத்தகம் Kata Markon Euangelion (The Gospel according to Mark) என்று அழைக்கப்படுகிறது.

☀ நம்முடைய பரிசுத்த வேதாகமத்திலே 41-வது புத்தகமாக வருகிறது.

☀ மாற்கு சுவிசேஷமே முதலாவது எழுதப்பட்ட சுவிசேஷம்.

☀ சுவிசேஷங்களில் மிகச் சிறியதான இப்புத்தகத்தை எழுதியவர் மாற்கு என சொல்லப்படுகிறது.

☀ இவர் இயேசுவின் அப்போஸ்தலருடைய உடன் ஊழியர், நற்செய்தியின் சேவையில் தன் வாழ்க்கையையே தியாகம் செய்தவர்.

☀ ஆனால் இவர் 12 அப்போஸ்தலரில் ஒருவரல்ல, இயேசுவின் மிக நெருங்கிய தோழர்களில் ஒருவரும் அல்ல.

☀ அப்படியென்றால், இயேசுவின் ஊழியத்தை தொடக்கத்திலிருந்து முடிவு வரை உயிரோட்டத்தோடு நுட்பமாக விவரிக்க இவரால் எப்படி முடிந்தது? அவற்றை பேதுருவிடமிருந்தே அவர் பெற்றிருக்க வேண்டும்; ஏனெனில் பேதுரு அவருடைய நெருங்கிய கூட்டாளி.

☀ சொல்லப்போனால், பேதுரு அவரை ‘என் குமாரன்’ என்றுகூட அழைத்தார்! (1 பே. 5:13)

☀ மாற்கு பதிவுசெய்த கிட்டத்தட்ட எல்லா விவரங்களுக்கும் பேதுருவே கண்கண்ட சாட்சி. ஆகவே மற்ற சுவிசேஷங்களில் இல்லாத பல விளக்கக் குறிப்புகள் பேதுருவினிடமிருந்து அவருக்குத் தெரிய வந்திருக்கலாம். உதாரணத்திற்கு,

✍ செபெதேயுவுக்காக வேலைசெய்த ‘கூலியாட்கள்’

✍ குஷ்டரோகி “முழங்கால்படியிட்டு” இயேசுவைக் கெஞ்சிக் கேட்டது

✍ பிசாசுபிடித்த மனிதன் ‘கல்லுகளினாலே தன்னைக் காயப்படுத்திக்கொண்டது’

✍ இயேசு “தேவாலயத்துக்கு எதிராக” ஒலிவ மலையின்மீது உட்கார்ந்திருக்கையில் “மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகங்களின்மேல் வருகிறதைப்” பற்றிய தம்முடைய தீர்க்கதரிசனத்தைக் கொடுத்தது போன்றவற்றை குறிப்பிடலாம். (மாற். 1:20,40; 5:5; 13:3,26).

☀ பேதுருவைப் பொருத்தவரை அவர் ஆழ்ந்த உணர்ச்சியுள்ளவர். ஆகவே இயேசுவின் உணர்ச்சிகளை அப்படியே மாற்குவுக்கு விவரித்திருந்தார்.

☀ அதன் காரணமாகவே மக்களுக்காக இயேசு பரிதாபப்பட்டு செயல்பட்ட விதத்தை மாற்கு அடிக்கடி தன் பதிவில் குறிப்பிடுகிறார். உதாரணமாக,

✍ அவர் ஆழ்ந்த துக்கமடைந்து...

✍ அவர் ஆழ்ந்த பெருமூச்சுவிட்டார்...

✍ “மிகவும் மனம்புழுங்கினார்” என்றெல்லாம் அவர் பதிவுசெய்கிறார். (3:5; 7:34; 8:12)

☀ பணம்படைத்த இளம் அதிபதியை அவர் அன்புகூர்ந்தார் என்று சொல்வதன் மூலம் அவன்மீது இயேசுவுக்கிருந்த கனிவான உணர்ச்சியைப் பற்றி மாற்கு மட்டுமே நமக்குச் சொல்கிறார். (10:21)

☀ மேலும் இயேசு ஒரு சிறுபிள்ளையைத் தம் சீஷர்களின் நடுவில் நிறுத்தினார் என்று குறிப்பிடுவதோடு நிறுத்திக் கொள்ளாமல், “அதை அரவணைத்து” என்றும், மற்றொரு சந்தர்ப்பத்தில் “பிள்ளைகளை அன்பாக அணைத்து” என்றும் கூறும் விவரத்தில் எத்தகைய அன்புணர்ச்சியை நாம் காண்கிறோம். (9:36; 10:13-16)

☀ இயேசு கெத்செமனேயில் கைது செய்யப்படுகிறார். சீஷர்கள் அனைவரும் அவரைவிட்டு ஓடிவிடுகின்றனர். அப்போது, ‘ஒரு வாலிபர் ஒரு துப்பட்டியை மாத்திரம் தன்மேல் போர்த்துக்கொண்டு’ அவர் பின் செல்கிறார். கூட்டம் அவரையும் பிடிக்க முயலுகிறது. உடனே ‘அவர் தன் துப்பட்டியைப் போட்டுவிட்டு, நிர்வாணமாய் அவர்களை விட்டு ஓடிப்போகிறார்.’ மாற்குவே இந்த வாலிபராக இருக்கலாம் என பொதுவாய் நம்பப்படுகிறது.

☀ இவர் அப்போஸ்தலருடைய நடபடிகளில் ‘மாற்கு என்னும் பேர்கொண்ட யோவான்’ என குறிப்பிடப்படுகிறார்.

☀ அப்.12.12ல் குறிப்பிடப்பட்டுள்ள மாற்குவின் வீட்டிற்கு (மாற்குவின் தகப்பனார் காலத்தில்) இயேசு நமது சீஷர்களுடன் கடைசியாகப் பஸ்காவைப் புசித்தார்.

☀ மாற்கு 14.14 - கெத்செமெனே தோட்டம் அந்த வீட்டுடன் சேர்ந்தது.

☀ 14,13ல் தண்ணீர் குடம் கொண்டு வந்த அந்த மனிதன் மாற்கு என்றும் எண்ணப் படுகிறது.

☀ மாற்கு பர்னபாவிற்கு இனத்தான் (கொலோ.4.10). எருசலேமில் வசித்த மரியாளின் மகன் (அப்.12.12)

☀ பவுலும் பர்னபாவும் அந்தியோகியாவுக்குச் சென்ற போது மாற்குவும் அவர்களுடன் சென்று அவர்களின் சுவிசேஷப் பயணத்தில் சேர்ந்து கொண்டார். ஆனால் இடையில் மாற்கு அவர்களை விட்டுப் பிரிந்து சென்று விட்டார் (அப்.13.1,13).

☀ மாற்கு தன்னை விட்டு விலகிப் போனதாகப் பவுல் நினைத்தார். எனவே, இரண்டாவது சுவிசேஷப் பயணத்தில் மாற்குவைத் தங்களுடன் அழைத்துச் செல்ல பர்னபா விரும்பிய போது பவுல் இதற்கு மறுத்து விட்டார் (அப்.15.38).

☀ எனவே, மாற்குவைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு பர்னபா சீப்புரு தீவுக்குச் சென்றார். பவுல் சீலாவைக் கூட்டிக் கொண்டு போனார்.

☀ சில காலத்திற்குப் பின் பவுல் மாற்குவை மன்னித்துத் தனக்கு உதவியாளராக ஏற்றுக் கொண்டார்.

☀ இயேசு கிறிஸ்துவின் பிரசங்கங்கள், போதகங்கள் ஆகியவற்றின் மீது அல்ல, மாறாக அவருடைய செயல்கள் மீதே மாற்கு கவனத்தை ஒருமுகப்படுத்துகிறார்.

☀ இயேசுவின் உவமைகளில் சிலவற்றையும், அவருடைய நீண்ட போதனைகளில் ஒன்றையும் மட்டுமே மாற்கு குறிப்பிடுகிறார்.

☀ மலைப்பிரசங்கத்தைப் பற்றிய குறிப்பு இல்லை. மாற்குவின் சுவிசேஷம் சிறியதாக இருப்பதற்கு இதுவே காரணம்.

☀ ஆனால் மற்ற சுவிசேஷங்களைப் போலவே இயேசு செய்த செயல்களைப் பற்றிய குறிப்புகள் அனைத்தும் இதில் இருக்கின்றன.

☀ குறைந்தபட்சம் 19 அற்புதங்களாவது திட்டவட்டமாய் குறிப்பிடப்பட்டுள்ளன.

☀ இயேசுவின் வம்சாவளி சம்பந்தப்பட்ட விவரத்தை விட்டுவிடுகிறார்.

☀ கிறிஸ்துவின் சுவிசேஷம் உலகளாவிய முக்கியத்துவம் பெற்றது என்பதை காண்பிக்கின்றது.

☀ யூதரல்லாதோருக்கு பரிச்சயமில்லாத யூத பழக்கவழக்கங்கள், போதகங்கள் பற்றி விளக்கக் குறிப்புகளைத் தருகிறது. (2:18; 7:3,4; 14:12; 15:42)

☀ அரமிய சொற்கள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. (3:17; 5:41; 7:11, 34; 14:36; 15:22,34)

☀ பலஸ்தீனா பகுதியை சார்ந்த பெயர்களுக்கும் தாவரங்களுக்கும் விளக்கம் தருகிறது. (1:5,13; 11:13; 13:3)

☀ யூத நாணயங்களின் மதிப்பை ரோம பணத்தில் குறிப்பிடுகிறது. (12:42)

☀ சுவிசேஷ எழுத்தாளர்களில் மற்றவர்களைப் பார்க்கிலும் மாற்கு அதிக லத்தீன் சொற்களைப் பயன்படுத்துகிறார். உதாரணங்கள்:

✍ ஸ்பெக்குலேட்டர் (சேவகன்)

✍ பிரிட்டோரியம் (அதிபதியின் மாளிகை)

✍ சென்டுரியோ (நூற்றுக்கதிபதி). [6:27; 15:16, 39].

☀ மாற்குவின் சுவிசேஷம் மற்ற சுவிசேஷங்களுடன் மாத்திரமல்ல, ஆதியாகமத்திலிருந்து வெளிப்படுத்துதல் வரையான முழு பரிசுத்த வேதாகம பதிவுடனும் ஒத்திருக்கிறது.

☀ மொத்தம் 16 அதிகாரங்களும், 678 வசனங்களையும் கொண்டுள்ளது.

☀ 14-வது அதிகாரம் பெரிய அதிகாரமாகவும், 16-வது அதிகாரம் சிரிய அதிகாரமாகவும் உள்ளது.

☀ ‘தேவனுடைய ராஜ்யம்’ என்ற சொற்றொடர் 14 தடவைகள் வருகின்றது

THE NEW TESTAMENT - மத்தேயு

மத்தேயு


☀ மூல மொழியாகிய கிரேக்கத்தில் இப்புத்தகம் Kata Matthaion Euangelion (The Gospel according to Matthew) என்று அழைக்கப்படுகின்றது.


☀ நம்முடைய பரிசுத்த வேதாகமத்திலே 40-வது புத்தகமாக வருகிறது.


☀ கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை முதலில் எழுத்தில் வடித்தவர் மத்தேயு.


☀ இவரது பெயர், “மத்தித்தியா” என்ற எபிரெய வடிவின் சுருக்கமாக இருக்கலாம்.


☀ அதற்கு, “யாவேயின் கொடை” என்று அர்த்தம்.


☀ இயேசு தெரிந்தெடுத்த 12 அப்போஸ்தலரில் இவரும் ஒருவர்.


☀ இயேசுவின் சீஷராவதற்கு முன்பாக, மத்தேயு வரி வசூலிப்பவராக இருந்தார். இந்த வேலையை யூதர்கள் முற்றிலுமாக வெறுத்தனர்; ஏனெனில் அது, அவர்கள் சுயாதீனர் அல்ல, ரோமப் பேரரசின் ஆதிக்கத்தின் கீழிருப்போர் என்பதை இடைவிடாது நினைப்பூட்டியது.


☀ மத்தேயுவின் மற்றொரு பெயர் லேவி.


☀ இவருடைய தகப்பனின் பெயர் அல்பேயு.


☀ தம்மைப் பின்பற்றும்படி இயேசு அவரை அழைத்தபோது உடனடியாக பின்சென்றார்.


☀ “சுவிசேஷம்” என்ற இந்தச் சொல்லுக்கு அர்த்தம் “நற்செய்தி.” என்பதாகும்.


☀ முதல் மூன்று சுவிசேஷங்களைப் பெரும்பாலும் ஆங்கிலத்தில் ‘சினாப்டிக் (Synoptic)’ என அழைக்கின்றனர்; இதற்கு “ஒரேவிதமான கருத்து” என்று அர்த்தம்.


☀ “ராஜ்யம்” என்ற வார்த்தையை அடிக்கடி (50-க்கும் மேற்பட்ட தடவை) பயன்படுத்தியிருப்பதால், இந்த சுவிசேஷத்தை ராஜ்ய சுவிசேஷம் என அழைக்கலாம்.


☀ பரலோக ராஜ்யத்தைப் பற்றிய ஏழு உவமைகள் (13:1-58).


1). விதைக்கிறவனின் உவமை

2). வயலிலுள்ள களைகள்

3). கடுகு விதை

4). புளித்தமாவு

5). புதைந்திருந்த பொக்கிஷம்

6). விலையுயர்ந்த முத்து

7). வலை


☀ முதல் 18 அதிகாரங்களில், ராஜ்யம் என்ற தலைப்பை வலியுறுத்தியதால் மத்தேயுவால் காலவரிசையை பின்பற்ற முடியவில்லை. எனினும், கடைசி பத்து அதிகாரங்கள் (19-லிருந்து 28 வரை) காலவரிசைப்படி உள்ளன, ராஜ்யத்தைப் பற்றியும் தொடர்ந்து அறிவுறுத்துகின்றன.


☀ இப்புத்தகத்தில் குறைந்தபட்சம் பத்து உவமைகள் உள்ளன:


01.வயலில் களைகள் (13:24-30)

02. புதைந்திருந்த பொக்கிஷம் (13:44)

03. விலையுயர்ந்த முத்து (13:45, 46)

04. வலை (13:47-50)

05. இரக்கமற்ற அடிமை (18:23-35)

06. வேலையாட்களும் திநாரியமும் (20:1-16)

07. தகப்பனும் இரண்டு பிள்ளைகளும் (21:28-32)

08. ராஜாவின் குமாரனுடைய கலியாணம் (22:1-14)

09. பத்துக் கன்னிகைகள் (25:1-13)

10. தாலந்துகள் (25:14-30).


☀ மத் 1:23-இல் இயேசு இம்மானுவேல் என்று அடையாளம் காட்டப்படுகிறார். இந்த எபிரேயச் சொல்லுக்குக் கடவுள் நம்மோடு இருக்கிறார் என்பது பொருள்.


☀ மொத்தம் 28 அதிகாரங்களும், 1071 வசனங்களையும் கொண்டுள்ளது.


☀ 26-வது அதிகாரம் பெரிய .  அதிகாரமாகவும், 3-வது அதிகாரம் சிரிய அதிகாரமாகவும் உள்ளது.


☀ இயேசுவே முன்னறிவிக்கப்பட்ட மேசியா என்பதை நிரூபிக்க தீர்க்கதரிசன நிறைவேற்றங்கள் மீது மத்தேயு கவனத்தைத் திருப்புகிறார்.


✍ மத். 1:23 — ஏசா. 7:14

✍ மத். 2:1-6 — மீகா 5:2

✍ மத். 2:13-18 — ஓசி. 11:1-ம் எரே. 31:15-ம்

✍ மத். 2:23 — ஏசா. 11:1🌹 தினம் ஒரு புத்தகம் 🌹
மாற்கு

☀ மூல மொழியாகிய கிரேக்கத்தில் இப்புத்தகம் Kata Markon Euangelion (The Gospel according to Mark) என்று அழைக்கப்படுகிறது.


☀ நம்முடைய பரிசுத்த வேதாகமத்திலே 41-வது புத்தகமாக வருகிறது.


☀ மாற்கு சுவிசேஷமே முதலாவது எழுதப்பட்ட சுவிசேஷம்.


☀ சுவிசேஷங்களில் மிகச் சிறியதான இப்புத்தகத்தை எழுதியவர் மாற்கு என சொல்லப்படுகிறது.


☀ இவர் இயேசுவின் அப்போஸ்தலருடைய உடன் ஊழியர், நற்செய்தியின் சேவையில் தன் வாழ்க்கையையே தியாகம் செய்தவர்.


☀ ஆனால் இவர் 12 அப்போஸ்தலரில் ஒருவரல்ல, இயேசுவின் மிக நெருங்கிய தோழர்களில் ஒருவரும் அல்ல.


☀ அப்படியென்றால், இயேசுவின் ஊழியத்தை தொடக்கத்திலிருந்து முடிவு வரை உயிரோட்டத்தோடு நுட்பமாக விவரிக்க இவரால் எப்படி முடிந்தது? அவற்றை பேதுருவிடமிருந்தே அவர் பெற்றிருக்க வேண்டும்; ஏனெனில் பேதுரு அவருடைய நெருங்கிய கூட்டாளி.


☀ சொல்லப்போனால், பேதுரு அவரை ‘என் குமாரன்’ என்றுகூட அழைத்தார்! (1 பே. 5:13)


☀ மாற்கு பதிவுசெய்த கிட்டத்தட்ட எல்லா விவரங்களுக்கும் பேதுருவே கண்கண்ட சாட்சி. ஆகவே மற்ற சுவிசேஷங்களில் இல்லாத பல விளக்கக் குறிப்புகள் பேதுருவினிடமிருந்து அவருக்குத் தெரிய வந்திருக்கலாம். உதாரணத்திற்கு,


✍ செபெதேயுவுக்காக வேலைசெய்த ‘கூலியாட்கள்’


✍ குஷ்டரோகி “முழங்கால்படியிட்டு” இயேசுவைக் கெஞ்சிக் கேட்டது


✍ பிசாசுபிடித்த மனிதன் ‘கல்லுகளினாலே தன்னைக் காயப்படுத்திக்கொண்டது’


✍ இயேசு “தேவாலயத்துக்கு எதிராக” ஒலிவ மலையின்மீது உட்கார்ந்திருக்கையில் “மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகங்களின்மேல் வருகிறதைப்” பற்றிய தம்முடைய தீர்க்கதரிசனத்தைக் கொடுத்தது போன்றவற்றை குறிப்பிடலாம். (மாற். 1:20,40; 5:5; 13:3,26).


☀ பேதுருவைப் பொருத்தவரை அவர் ஆழ்ந்த உணர்ச்சியுள்ளவர். ஆகவே இயேசுவின் உணர்ச்சிகளை அப்படியே மாற்குவுக்கு விவரித்திருந்தார்.


☀ அதன் காரணமாகவே மக்களுக்காக இயேசு பரிதாபப்பட்டு செயல்பட்ட விதத்தை மாற்கு அடிக்கடி தன் பதிவில் குறிப்பிடுகிறார். உதாரணமாக,

✍ அவர் ஆழ்ந்த துக்கமடைந்து...

✍ அவர் ஆழ்ந்த பெருமூச்சுவிட்டார்...

✍ “மிகவும் மனம்புழுங்கினார்” என்றெல்லாம் அவர் பதிவுசெய்கிறார். (3:5; 7:34; 8:12)


☀ பணம்படைத்த இளம் அதிபதியை அவர் அன்புகூர்ந்தார் என்று சொல்வதன் மூலம் அவன்மீது இயேசுவுக்கிருந்த கனிவான உணர்ச்சியைப் பற்றி மாற்கு மட்டுமே நமக்குச் சொல்கிறார். (10:21)


☀ மேலும் இயேசு ஒரு சிறுபிள்ளையைத் தம் சீஷர்களின் நடுவில் நிறுத்தினார் என்று குறிப்பிடுவதோடு நிறுத்திக் கொள்ளாமல், “அதை அரவணைத்து” என்றும், மற்றொரு சந்தர்ப்பத்தில் “பிள்ளைகளை அன்பாக அணைத்து” என்றும் கூறும் விவரத்தில் எத்தகைய அன்புணர்ச்சியை நாம் காண்கிறோம். (9:36; 10:13-16)


☀ இயேசு கெத்செமனேயில் கைது செய்யப்படுகிறார். சீஷர்கள் அனைவரும் அவரைவிட்டு ஓடிவிடுகின்றனர். அப்போது, ‘ஒரு வாலிபர் ஒரு துப்பட்டியை மாத்திரம் தன்மேல் போர்த்துக்கொண்டு’ அவர் பின் செல்கிறார். கூட்டம் அவரையும் பிடிக்க முயலுகிறது. உடனே ‘அவர் தன் துப்பட்டியைப் போட்டுவிட்டு, நிர்வாணமாய் அவர்களை விட்டு ஓடிப்போகிறார்.’ மாற்குவே இந்த வாலிபராக இருக்கலாம் என பொதுவாய் நம்பப்படுகிறது.


☀ இவர் அப்போஸ்தலருடைய நடபடிகளில் ‘மாற்கு என்னும் பேர்கொண்ட யோவான்’ என குறிப்பிடப்படுகிறார்.


☀ அப்.12.12ல் குறிப்பிடப்பட்டுள்ள மாற்குவின் வீட்டிற்கு (மாற்குவின் தகப்பனார் காலத்தில்) இயேசு நமது சீஷர்களுடன் கடைசியாகப் பஸ்காவைப் புசித்தார்.


☀ மாற்கு 14.14 - கெத்செமெனே தோட்டம் அந்த வீட்டுடன் சேர்ந்தது.


☀ 14,13ல் தண்ணீர் குடம் கொண்டு வந்த அந்த மனிதன் மாற்கு என்றும் எண்ணப் படுகிறது.


☀ மாற்கு பர்னபாவிற்கு இனத்தான் (கொலோ.4.10). எருசலேமில் வசித்த மரியாளின் மகன் (அப்.12.12)


☀ பவுலும் பர்னபாவும் அந்தியோகியாவுக்குச் சென்ற போது மாற்குவும் அவர்களுடன் சென்று அவர்களின் சுவிசேஷப் பயணத்தில் சேர்ந்து கொண்டார். ஆனால் இடையில் மாற்கு அவர்களை விட்டுப் பிரிந்து சென்று விட்டார் (அப்.13.1,13).


☀ மாற்கு தன்னை விட்டு விலகிப் போனதாகப் பவுல் நினைத்தார். எனவே, இரண்டாவது சுவிசேஷப் பயணத்தில் மாற்குவைத் தங்களுடன் அழைத்துச் செல்ல பர்னபா விரும்பிய போது பவுல் இதற்கு மறுத்து விட்டார் (அப்.15.38).


☀ எனவே, மாற்குவைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு பர்னபா சீப்புரு தீவுக்குச் சென்றார். பவுல் சீலாவைக் கூட்டிக் கொண்டு போனார்.


☀ சில காலத்திற்குப் பின் பவுல் மாற்குவை மன்னித்துத் தனக்கு உதவியாளராக ஏற்றுக் கொண்டார்.


☀ இயேசு கிறிஸ்துவின் பிரசங்கங்கள், போதகங்கள் ஆகியவற்றின் மீது அல்ல, மாறாக அவருடைய செயல்கள் மீதே மாற்கு கவனத்தை ஒருமுகப்படுத்துகிறார்.


☀ இயேசுவின் உவமைகளில் சிலவற்றையும், அவருடைய நீண்ட போதனைகளில் ஒன்றையும் மட்டுமே மாற்கு குறிப்பிடுகிறார்.


☀ மலைப்பிரசங்கத்தைப் பற்றிய குறிப்பு இல்லை. மாற்குவின் சுவிசேஷம் சிறியதாக இருப்பதற்கு இதுவே காரணம்.


☀ ஆனால் மற்ற சுவிசேஷங்களைப் போலவே இயேசு செய்த செயல்களைப் பற்றிய குறிப்புகள் அனைத்தும் இதில் இருக்கின்றன.


☀ குறைந்தபட்சம் 19 அற்புதங்களாவது திட்டவட்டமாய் குறிப்பிடப்பட்டுள்ளன.


☀ இயேசுவின் வம்சாவளி சம்பந்தப்பட்ட விவரத்தை விட்டுவிடுகிறார்.


☀ கிறிஸ்துவின் சுவிசேஷம் உலகளாவிய முக்கியத்துவம் பெற்றது என்பதை காண்பிக்கின்றது.


☀ யூதரல்லாதோருக்கு பரிச்சயமில்லாத யூத பழக்கவழக்கங்கள், போதகங்கள் பற்றி விளக்கக் குறிப்புகளைத் தருகிறது. (2:18; 7:3,4; 14:12; 15:42)


☀ அரமிய சொற்கள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. (3:17; 5:41; 7:11, 34; 14:36; 15:22,34)


☀ பலஸ்தீனா பகுதியை சார்ந்த பெயர்களுக்கும் தாவரங்களுக்கும் விளக்கம் தருகிறது. (1:5,13; 11:13; 13:3)


☀ யூத நாணயங்களின் மதிப்பை ரோம பணத்தில் குறிப்பிடுகிறது. (12:42)


☀ சுவிசேஷ எழுத்தாளர்களில் மற்றவர்களைப் பார்க்கிலும் மாற்கு அதிக லத்தீன் சொற்களைப் பயன்படுத்துகிறார். உதாரணங்கள்:

✍ ஸ்பெக்குலேட்டர் (சேவகன்)

✍ பிரிட்டோரியம் (அதிபதியின் மாளிகை)

✍ சென்டுரியோ (நூற்றுக்கதிபதி). [6:27; 15:16, 39].


☀ மாற்குவின் சுவிசேஷம் மற்ற சுவிசேஷங்களுடன் மாத்திரமல்ல, ஆதியாகமத்திலிருந்து வெளிப்படுத்துதல் வரையான முழு பரிசுத்த வேதாகம பதிவுடனும் ஒத்திருக்கிறது.


☀ மொத்தம் 16 அதிகாரங்களும், 678 வசனங்களையும் கொண்டுள்ளது.


☀ 14-வது அதிகாரம் பெரிய அதிகாரமாகவும், 16-வது அதிகாரம் சிரிய அதிகாரமாகவும் உள்ளது.


☀ ‘தேவனுடைய ராஜ்யம்’ என்ற சொற்றொடர் 14 தடவைகள் வருகின்றது.

Saturday, January 14, 2012

யாக்கோபு..

ஈசாக்கன் மகன் (தந்திரக் காரன்)
ஏமாற்றுபவனைப் பெரிய தலைவனாகும் படி தேவன் மாற்றினான்.

முக்கிய வசனம்
நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்துக்கு உன்னைத் திரும்பிவரப்பண்ணுவேன்; நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றார். (ஆதி.28:15)

சுருக்கமான குறிப்புகள்
• ஈசாக்கின் மகன்
• தன் தகப்பனையும் சகோதரனையும் ஏமாற்றினான்.
• பயத்தினால் பெத்தேலுக்குச் சென்றான். அவனுடைய பயணத்திற்கு அவனுடைய தாய் ஆதரவு கொடுத்தாள்.
• ராகேல், லேயாள் இருவரையும் மணந்து கொண்டான்.
• அவன் மாற்றப்பட்டதின் அடையாளமாக இஸ்ரவேல் என்னும் புதிய பெயர் கொடுக்கப்பட்டது.

1. முகவுரை
ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு – இவர்கள் பழைய ஏற்பாட்டில்; குறிப்பிடத்தக்க சிறப்பு வாய்நத மக்களாக இருக்கின்றனர். இவர்களுடைய சிறப்பு இவர்களுடைய தனிப்பட்ட குணத்தைப் பற்றியதல்ல, தேவனைப் பொறுத்ததாக இருக்கிறது. இவர்கள் செல்வந்தர்களும் சக்தி வாய்ந்தவர்களாகவும் இருந்த போதிலும் பொய் பேசவும், ஏமாற்றக் கூடியவர்களாகவும் சுய நலக்காரராகவும் இருந்தனர். நாம் எதிர்பார்க்கும் அவளவுக்கு அவர்கள் குற்றமற்றவர்களாகவோ, தலைவர்களாகவோ இருக்கவில்லை. அவர்கள் நம் போலவே, தேவனைப் பிரியப்படுத்த மனதுள்ளவர்களாக, ஆனால் அடிக்கடி தவறிப் போகிறவர்களாக இருந்தனர்.

யாக்கோபு பிறப்பதற்கு முன்பே, தேவன் தமது திட்டம் யாக்கோபின் மூலமாக நிறைவேற்றப்படும்; அவனுடைய இரட்டை சகோதரன் ஏசாவின் மூலமாக அல்ல என்று வாக்குக் கொடுத்திருந்தார். யாக்கோபு செயல்பட்ட முறைகள் தவறாக இருந்த போதிலும், அவனுடைய திறமை, உறுதியான தீர்மானம், பொறுமை ஆகியவற்றை நாம் பாராட்ட வேண்டும்.
யாக்கோபின் வாழ்க்கையில் 4 கட்டங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் அவன் தனிப்பட்ட முறையில் தேவனைச் சந்தித்த விவரத்துடன் குறிப்பிடப்பட்டுள்ளது.

1. முதலாவது கட்டத்தில் யாக்கோபு, “குதிங்காலைப் பிடித்தான்” என்று பொருள்படும், தன் பெயருக்கேற்றபடி வாழ்ந்தான். (அவன் ஏமாற்றுகிறான் பிறக்கும் போது ஏசாவின் குதிங்களைப் பிடித்தான். பின்பு வீட்டை விட்டு ஓடிப் போவதற்கு முன், தன் சகோதரனின் பிறப்புரிமையையும் அசீர்வாதத்தையும் எடுத்துக் கொண்டான்

2. இரண்டாவது கட்டத்தில், யாக்கோபு தன் மாமானான லாபானால் ஏமாற்றப்பட்ட அனுபவத்தைப் பெற்றான். தான் விரும்பியதை அடையவதற்காக கடினமாக உழைக்க ஆயத்தமாக இருந்தான். அவன் ராகேலை நேசித்ததினால் அவளுக்காக மற்றொரு 7 ஆண்டுகள் வேலை செய்தான். அந்த நாட்டின் வழக்கத்தின்படி தான் நேசிக்காத லேயாளை மணந்து கொள்ளும்படி வற்புறுத்தப்பட்டான். (ஆதி.29:26) மொத்தத்தில் லேயாளையும் ராகேலையும் மணந்து கொள்ளும்படி 14 வருடங்கள் வேலை செய்தான். ராகேலுக்காக 7 வருடங்கள் வேலை செய்த போதிலும், அவள் மேல் வைத்திருந்த அன்பினால் அது சில நாட்கள் போல் கழிந்து விட்டது. (ஆதி.29:20).

3. மூன்றவாது கட்டத்தில், கைப்பற்றிக் கொள்பவன் என்ற புதிய பெயருடன் இருக்கிறான். அவனுடைய பெயர் மாற்றப்பட்டு விட்டது. இந்த முறை யோர்தான் நதியோரத்தில், அவன் தேவனைப் பிடித்துக் கொண்டு அவரைப் போகவிடவில்லை. தன்னைத் தொடர்ந்து ஆசிர்வதிக்க வரும் தேவனைத் தான் சார்ந்திருப்பதை உணர்ந்தான். தேவனோடு அவனுக்குள்ள உறவு அவன் வாழ்க்கைக்கு அத்தியாவசியமாற்று. அவன் பெயர் ‘இஸ்ரவேல்’ என்று மாற்றப்பட்டது. இதன் பொருள், ‘தேவனோடு போராடினான்’ என்பதாகும்.

4. நான்காவது கடைசியானதுமான கட்டம் – பிடித்துக் கொள்ளப்படுதல் – தேவன் அவன் மேல் உறுதியன பிடியைப் பிடித்துக் கொண்டார். எகிப்துக்கு வரும்படி யோசேக்பு கொடுத்த அழைப்புக்கு மறு உத்தரவாக, யாக்கோபு தேவனுடைய அனுமதியில்லாமல் தான் எங்கும் போக விரும்பவில்லை (ஆதி.46:1-4).


2. முடிவுரை
ஆபிரகாமுக்கு தேவன் கொடுத்த வாக்குறுதிகள் யாக்கோபின் மூலமாக தொடர வேண்டும்; ஏசாவின் மூலமாக அல்ல என்பது தேவனுடைய நோக்கமாக இருந்த போதிலும், ரெபெக்காளும் யாக்கோபும் மேற்கொண்ட தீய உபாயங்கள் தண்டனையைக் கொண்டு வந்தன. தங்கள் ஏமாற்று வேலையினிமித்தம் இருவரும் வேதனைப் பட்டார்கள். தாய்க்கும் மகனுக்குமிடையே வாழ்நாள் முழுவதும் பிரிவு ஏற்பட்டது. இரண்டாவதாக, யாக்கோபு தன் சொந்த மாமன் லாபானால் ஏமாற்றப்பட்டான். ராகேலுக்காக 7 வருடம் வேலை செய்த போதிலும் முடிவில் ராகேலுக்குப் பதிலாக லேயாளைக் கொடுத்து லாபான் அவனை ஏமாற்றினான். ராகேலுக்காக இன்னும் 7 ஆண்டுகள் வேலை செய்ய வேண்டியதாயிற்று. வலி கொடுக்கும் விஷயத்திலும் லாபான் யாக்கோபை ஏமாற்றினான். ஆனால் தேவன் அவனோடு கூட இருந்தார். அவன் வாழ்க்கையின் இறுதி காலம் சமாதானம், சந்தோஷம், சுபிட்சம் நிறைந்ததாக இருந்தது. அவனுடைய கடைசி வார்த்தைகளாக, ‘சமாதான கர்த்தர் வருவார்’ என்று முன்னறிவித்தான் (ஆதி.49:10).

3. வேதாகம ஆதாரங்கள்
a. இவனைப் பற்றிய விவரங்கள் அனைத்தும் வேதத்தில் ஆதியாகமம் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

4. விவாதத்துக்கான கேள்விகள்
a. அவனுடைய குடும்பத்தைப் பற்றிய விவரங்களைக் கூறு.
b. அவன் ஏன் தன் தகப்பனையும் சகோதரனையும் ஏமாற்றினான்?
c. லாபான் அவனை எவ்வாறு ஏமாற்றினான்?
d. அவனுடைய மனைவிமார்கள் யார்?
e. ராகேலுக்காக உழைத்த 7 வருடங்கள் அவனுக்கு எப்படியிருந்த்து? (ஆதி.29:20)

யோசபாத்..

யூதாவின் ராஜா

முக்கிய வசனம்:
எசேக்கியா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின்பு, அவனைத் தாவீது வம்சத்தாரின் கல்லறைகளில் பிரதானமான கல்லறையில் அடக்கம்பண்ணினார்கள்; யூதாவனைத்தும் எருசலேமின் குடிகளும் அவன் மரித்தபோது அவனைக் கனம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய மனாசே அவன் ஸ்தானத்தில் ராஜாவானான். (2நாளாகம்ம் 32-33)

சுருக்கமான குறிப்புகள்
• யூதாவின் 4வது ராஜா. தன் தகப்பனான ஆசாவுக்குப் பின் ராஜாவானான்.
• ராஜ்யத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்தான்.
• உம்ரியின் குடும்பத்துடன் திருமண ஒப்பந்தம் செய்து இஸ்ரவேலுடன் நீண்ட நாளாக இருந்த விரோதத்தை முடிவுக்குக் கொண்டு வந்தான்.
• தன்னுடைய ஒழுக்கத்தில் உறுதியுடன் இல்லை.
• துன்மார்க்கமான ஆகாப், யேசபேலின் குமாரத்தியாயிருந்த அத்தாலியாளைத் தன்னுடைய மகன் மணந்து கொள்ள அனுமதித்தான்.

1. முகவுரை – அவனுடைய சரித்திரம்
அவனுடைய பெயர், ‘யெகோவா நியாந் தீர்க்கிறார்’ என்று பொருள்படும். தன்னுடைய 35வது வயதில் யூதாவின் சிம்மாசனம் ஏறிய ஆசா ராஜாவின் மகன். 35 வருடங்கள் ஆட்சி புரிந்தான் (2 நாளா.17:10). கி.மு.873 – 849 வரை யூதாவை அரசாண்டான். இவனுடைய தாயார் அசுபாள். சில்கியின் குமாரத்தி (2 நாளா.17:1). (1இராஜ 22:42, 2 நாளா.20:31) இஸ்ரவேலின் அரசனான பாஷாவை ஜெயித்து, தன் தகப்பனார் கைப்பற்றிய யூதாவின் பட்டணங்களிலும் இப்ராயீமிலும் பாதுகாப்புப் படைகளை நிறுத்தினான். புற சமயத்திலுள்ள தேவர்களின் உயர்ந்த இடங்களையும் பள்ளங்களையும் தகர்த்து, நிலத்தின் குறுக்காகச் சென்று, மக்களுக்கு நியாயப்பிரமானத்தைக் கற்பிக்கும் படி பல குழுக்களையும் ஆசாரியர்கள், லேவியரையும் அனுப்பினான. பெரிய சேனையை வைத்திருந்ததினால், கப்பம் கட்டும் பெலிதியர், அரேபியர் ஆகிய சுற்றிலுமுள்ள மக்களால் மதிக்கப்பட்டான். அவனைக் குறித்த பயமும் இருந்தது. விக்கிரகாராதனைக் காரனான இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப் உடன் தோழமை வைத்ததற்காக அவன் கடிந்து கொள்ளப்பட்டான். பட்டணங்கள் தோறும் நியாயாதிபதிகளை நியமித்து, அவர்கள் கர்த்தருக்குப் பயந்து உண்மையோடும் உத்தம இருதயத்தோடும் பணிபுரிய வேண்டுமென்று கட்டளை கொடுத்தான் (2நாளா.19ம் அதிகாரம்). அவனுடைய விண்ணட்ப்பத்திற்குப் பதிலளித்து சுற்றிலுமுள்ள மோவாபியர், அம்மோனியர் போன்ற எதிரிக்களின் மேல் பூரண வெற்றியளித்தார்.

யூதாவின் ராஜாவான யோசபாத் பொல்லாப்புச் செய்கிறவனாக அகசியா என்னும் இஸ்ரவேலின் அரசனுடன் சேர்ந்து எசியோன் கேபேரிய்யே கப்பல் கட்டினார்கள். (2நாளா.20:35-37) கப்பல்கள் உடைந்து போயிற்று. தீர்க்கதரிசியான எலெயேசர் இதை முன்னறிவித்திருந்தான். அவர்களுடைய பரிசுத்தமில்லாத சேர்க்கைக்குத் தண்டனையாக இது நிகழ்ந்தது. இவ்விதமாக சுற்றுப்புறத்தாரோடு யுத்தமில்லாத இளைப்பாறுதலை தேவன் கட்டளையிட்டதினால் யோசபாத்தின் ராஜ்யபாரம் அமரிக்கையாயிருந்தது. (2 நாளா.20:30).

யோசபாத் மரித்து, தாவீதின் நகரில் தன் பிதாக்களோடே அடக்கம் பண்ணப்பட்டான். (2 நாளா.21.1; 1இராஜா.22:50).

தன்னுடைய வாழ்நாளின் பெரும் பகுதியில், யோசபாத் தன் தகப்பனாகிய ஆசா செய்த தவறுகளிலிருந்து கற்றுக் கொண்டு அக்ககரமான செய்லகளை மட்டும் பின்னபற்றினான். ஆனால் பல சந்தர்ப்பங்களில் அவன் செய்த தீர்மானங்கள், அவனுடைய தகப்பனின் முன்மாதிரியான, எதிர்மறையான தன்மைகளை வெளிப்படுத்துகின்றன.

மக்களுக்கு மத போதனையின் தேவை, அல்லது எதிரியின் பெரிய சேனைகளுடன் யுத்தத்தில் அச்சுறுத்தல் போன்ற சவால்கள் தெள்ளெனத் தெரியும் போது, யோசபாத் வழிகாட்டுதலுக்காக தேவனிடம் திரும்பி சரியான தெரிந்து கொள்ளுதலைச் செய்து கொண்டான். எல்லாம் தனக்கு விரோதமாக இருப்பதுபோல்தோன்றும் போது, அவன் உறுதியுடன் தேவன் பேரில் சார்ந்திருந்தான். அன்றாடக வாழ்க்கையன் திட்டங்கள், செயல்களுக்குத் தேவனைச் சார்ந்து ஜீவிப்பதில்தான் அவன் பெலவீனனாக இருந்தான். துன்மார்க்கனான ஆகாப், யேசபேல் இவர்களின் குமாரத்தியான அத்தாலியாளைத் தன் மகன் மணம் புரிய அனுமதித்தான். இவளும் தன் பெற்றோரைப் பேலவே பொல்லாதவளாக இருந்தாள். தேவனிடம் கேட்காமல் யோசபார் ஆகாப் உடன் சேர்ந்து கொண்ட போது அவன் ஏறக்கறைய கொல்லப்படும் நிலைமைக்கு வந்து விட்டான். பின்னர், புத்தியின்றி கப்பல் கட்டும் தொழிலில் ஆகாபின் குமாரனான அகசியாவுடன் கூடிக் கொண்ட படியால் கர்த்தர் அவர்களுடைய கிரியைகளை முறித்துப் போட்டார். கப்பல்கள் உடைந்து போயின. (2 நாளா.20:35-37)

நமது பிரச்சனைகளும், சத்துருவும் நமக்குத் தெளிவாகத் தோன்றும் போது தேவன் உண்மையுள்ளவராக இருக்கிறார் என்ற காரணத்தினால், பிரச்சனைகள் தெளிவாகத் தெரியாமல் சத்துரு நமது கண்களுக்கு மறைவாக இருக்கும் நேரங்களிலும் நாம் தேவனுடைய உண்மையில் நம்பிக்கை வைத்து அவருடைய வழி நடத்துதலை நாட வேண்டும். யோசபாத் இதை அறிந்திருந்ததும் அந்த அறிவை பயன்படத்திக் கொள்ளவில்வலை.

2. பலமும் சாதனைகளும்.
a. அவன் தைரியமாக தேவனைப் பின்பற்றினான். தன்னுடைய தகப்பன் ஆசாவின் முந்திய வருடங்களைப் பற்றி மக்களுக்கு நினைப்பூட்டினான்.
b. தேவமெங்கும் மத போதனையை ஆரம்பித்தான்.
c. அவனுக்குப் பல ராணுவ வெற்றிகள் கிடைத்தன. அவன் ஒரு சிறந்த ஆற்றல் வாய்ந்த அரசன் என்பதை நிரூபித்து ஏதோமைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில் வெற்றி பெற்றான். இந்த வெற்றியின் முக்கியத்துவம் என்னவென்றால் இதினால் வியாபாரம் யெய்யும் மார்க்கங்கள் இவனுடைய அதிகாரத்தின் கீழ் வந்து, நாட்டுக்கு ஏராளமான செய்லவத்தைக் கொண்டு வந்தது. 2 நாளா.17:5; 18;1)
d. ராஜ்யம் முழுவதிலும் நல்ல சட்டதிட்டங்களையும் நியாயாதிபதிகளையும் ஏற்படுத்தினா.

3. அவனுடைய பெலவீனங்களும் தவறுகளும்
a. தனது தீர்மானங்களின் நீண்ட கால விளைவுகளைக் காணத் தவறி விட்டான்.
b. நாட்டில் விக்கிரகாராதனையை முற்றிலுமாக அழிக்கவில்லை.
c. திருமண உறவுகளின் மூலமாகப் பொல்லாத அரசனான ஆகாப் உடன் சிக்கிக் கொண்டான்.
d. தன்னுடைய குமாரன் ஆகாப்பின மகள் அத்தாலியாளை மணந்துகொள்ள அனுமதித்தான்.
e. கப்பல் கட்டும் தொழிலில் அகசியாவுடன சேர்நது கொண்டான். இது தோல்வியாக முடிந்தது.


4. வேத வசன ஆராதாங்கள்
a. 1இராஜா.15:24-22:50, 2நாளா.17-1-21:1ல் இவனுடைய சரித்திரம் சொல்லப்பட்டிருக்கிறது.
b. 2இராஜா.3:1-14; யோவேல் 3:2,12உம் இவன் குறிப்பிடப்பட்டிருக்கிறான்.

5. விவாதத்துக்கான கேள்விகள்.
a. அவனுடைய பலம் எவை?
b. அவனுடைய பெயரின் அர்த்தம் என்ன?
c. அவனுடைய பெலவீனங்கள் எங்கு காணப்பட்டன?
d. அவன் எப்படி மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு உண்மையுள்ளவனாக இருந்தான்? (2நாளா.17:7-9)
e. உம்ரியின் வீட்டோடு அவன் இஸ்ரவேலின் உறவை எவ்வாறு புதுப்பித்தான்?

யோசியா ராஜா.

யோசியா ராஜா– திருத்தம் செய்தவன்.


முக்கிய வசனம்:

" கர்த்தரிடத்துக்குத் தன் முழு இருதயத்தோடும் தன் முழு ஆத்துமாவோடும் தன் முழு பலத்தோடும் மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு ஏற்றபடியெல்லாம் செய்ய மனதைச் சாய்த்தான்; அவனைப்போலொத்த ராஜா அவனுக்குமுன் இருந்ததுமில்லை, அவனுக்குப்பின் எழும்பினதுமில்லை". (2 இராஜாக்கள் 23:25)


சுருக்கமான கதை:

. ஆண்டவர்மேல் பக்தியுள்ள ராஜா.
. விக்கிரக ஆராதனையை முற்றிலும் அழித்தான்.
. யூதாவின் எல்லைக்கு அப்பாலும் திருத்தங்கள் செய்தான்.
. எருசலேமிலிருந்த ஆலயத்தை பழுது பார்த்தான்.
. ஆண்டவரின் வார்த்தையை வாசித்தது பலர் வாழ்க்கையைத் தொட்டது.


முன்னுரை: யோசியா ராஜாவின் கதை:

யோசியா என்ற பெயருக்கு "எஹோவா ஆதரிக்கிறார் அல்லது சுகமாக்குகிறார்" என்று பொருள். ஆமோனின் குமாரனாகிய யோசியா தன் 8 வயதிலே யூதாவின் அரியணை ஏறினான் 2 இராஜாக்கள்21:26). அந்த சிறிய வயதிலும் அவனுடைய மிகுந்த தெய்வபக்தி எல்லாருக்கும் தெளிவாகத் தெரிந்தது. அவனுடைய ஆட்ஷியின் 12 வது வருடத்திலே அவனுடைய தேசம் முழுவதிலும் விக்கிரக ஆராதனையை நிறுத்தத் தொடங்கினான் (2 நாளாகமம் 34:3). எல்லா இடங்களிலும் மேடைகளையும், தோப்புகளையும், சொரூபங்களையும், விக்கிரக ஆராதனைக்குரிய பொருட்களையும் அழித்தான். அவன் நாடு முழுவதையும் சுற்றி வந்து இந்த கடமைகளைத் தானே முன்னின்று செய்து, ஆலய பழுது பார்க்கும் பணியை கண்காணிக்க மட்டுமே திரும்பி வந்தான்(2 நாளாகமம் 34:8). இந்த பழுது பார்க்கும் வேளையில்தான் ஆசாரியனாகிய இல்க்கியா நியாயப்பிரமாணப் புத்தகத்தைக் கண்டுபிடித்தான். இந்தப் புத்தகத்தை வாசித்ததால் ஒரு ஆச்சரியமான மாற்றம் யோசியாவிடதிலும், அவனுடைய மக்கலிடத்திலும் ஏற்பட்டது. இந்தப் புத்தகம் மோசேயைக் கொண்டு கட்டளையிடப்பட்ட கர்த்தரின் நியாயப்பிரமாணப் புத்தகத்தின் மூலப் படிவமாக இருக்கலாம் (2 நாளாகமம் 34:14), அல்லது மோவாபின் சமவெளியிலே மக்களிடத்தில் புதுப்பிக்கப்பட்ட உடன்படிக்கையின் படிவமாக இருக்கலாம் ( ஏனெனில், அது உடன்படிக்கைப் பெட்டியின் பக்கத்தில் வைக்கப்பட்டது; உபாகமம் 31:24–26), அல்லது, உபாகம புத்தகத்தின் மத்திய பாகத்தின் படிவமாக இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. மனாசே, ஆமோன் ராஜாக்களின் ஆட்சியின் போது, இந்தப் புத்தகம் வாசிக்கப்படுவது தடுக்கப்பட்டு பின்பு கைவிடப்பட்டு இருக்கலாம் என்பது சாத்தியமாகிறது. இந்தப் புத்தகத்தின் பாகங்கள் வாசிக்கப்பட்டபோது அது யோசியா ராஜாவை மிகவும் நெகிழச் செய்தது (2 இராஜாக்கள் 22:11). எசேக்கியா ராஜாவின் ஆட்சியின்போது அவன் கட்டளைப்படி இந்தப் புத்தகத்தின் பல படிவங்கள் செய்யப்பட்டபோதிலும், யோசியா ராஜா இந்தப் புத்தகத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கவில்லை என்றே தோன்றுகிறது. இந்த காலத்தில்தான் யோசியா தன் ஆட்களை தீர்க்கத்ரிசியாகிய உல்தாள் என்பவளிடத்தில் அனுப்பி, நியாயப்பிரமாணத்தைப் பழித்ததால் வரும் சாபம் அவன் காலத்தில் தேசத்தின்மேல் வருமா என்று கேட்டான். அவளும் தேசம் நிச்சயம் அழிக்கப்படும், ஆனாலும் யோசியா ராஜாவுக்கு அமைதியான முடிவு வரும் என்று தீர்க்கதரிசனம் கூறினாள் (2 நாளாகமம் 34:24). யோசியா ராஜா இந்த நியாயப்பிரமாண புத்தகம் காட்டிய வழிகளைப் பின்பற்றினான். இந்த நோக்கத்துக்காக தன் மக்களைக் கூடிவரச்செய்து, அவர்களுடனே உடன்படிக்கையைப் புதுப்பித்தான்.

சீர்திருத்தம் செய்யவேண்டும் என்ற யோசியாவின் திட்டம், பகைக்கும் பழக்கம் கொண்ட இஸ்ரவேல் மக்களால் எதிர்க்கப்பட்டது. இதன் பின் விளைவுகள் மிகவும் பயங்கரமாக இருந்தது ( 2 இராஜாக்கள் 22:20). எகிப்தின் ராஜாவாகிய நேகோ அப்பொழுது அசீரியர்களுடன் யுத்தம் பண்ணிக்கொண்டிருந்தான். யோசியா ஏதோ ஒரு வழியிலே அசீரிய ராஜாவோடு இணைந்திருந்ததால், ஐபிராத்து நதியோரமாக படையெடுத்து வந்த நேகோவை யுத்தத்தில் எதிர்க்கவேண்டி இருந்தது ( 2 நாளாகமம் 35:20). நேகோ யோசியாவை எதிர்க்க விரும்பாமல் அவனிடத்தில் தன் ஸ்தானாதிபதிகளை அனுப்பி அவனை விலகச் சொன்னான் (2 நாளாகமம் 35:21). ஆனால் யுத்தம் செய்வதில் உறுதியாக இருந்த யோசியா விலக மறுத்தான். அதனால் மெகிதோ பள்ளத்தாக்கில், மரணத்துக்கேதுவான காயமுற்று (2 நாளாகமம் 35:23), மரித்து மிகுந்த அன்போடும் ஆரவாரத்தோடும் அடக்கம்பண்ணப்பட்டான்.

யோசியாவின் தாத்தாவின் தந்தை எசேக்கியா. அவர் ஆண்டவருடன் மிகவும் நெருக்கமான உறவு வைத்திருந்தார். எசேக்கியாவைப் போலவே யோசியாவும் ஒரு சீர்திருத்தவாதியாக இருந்தான். யோசியாவின் தந்தையும், தாத்தவும் மிகக் கொடியவர்களாக இருந்தபோதிலும், யோசியாவின் வாழ்க்கை, கீழ்ப்படியும் மக்களுக்குத் தொடர்ச்சியான வழி நடத்துதலைத் தர ஆண்டவர் விருப்பமுடையவராய் இருக்கிறார் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. தன் தேசத்திலே ஆவிக்குரிய சுகவீனம் இருக்கிறது என்பதை மிகச் சிறிய வயதிலேயே யோசியா புரிந்து கொண்டிருந்தான். பயிர்களை விட வேகமாக விக்கிரகங்கள் தேசத்திலே முளைவிட்டுக்கொண்டிருந்தன. எவை எல்லாம் ஆண்டவருடைய உண்மையான வழிபாட்டுக்கு உரியவை அல்ல என்று கண்டானோ அவை எல்லாவற்றையும் அழித்துச் சுத்தம் செய்ததின் மூலம், யோசியா ஆண்டவரைத் தேடுவதைத் தொடங்கினான். இந்தச் செய்முறையில் ஆண்டவருடைய வார்த்தை மீண்டும் கன்டுபிடிக்கப்பட்டது. ராஜாவின் நோக்கங்களும் ஆண்டவருடைய எழுத்தின் வெளிப்படுத்துதலும் ஒன்றாக இணைக்கப்பட்டது.

ஆண்டவருடைய நியாயப்பிரமாணம் யோசியாவுக்கு வாசிக்கப்பட்டபோது அவன் அதிர்ச்சியடைந்தான், பயந்தான் பின் தாழ்மையடைந்தான். ஆண்டவருடைய பரிசுத்தத்தைப்பார்த்து மகிழ்ச்சியில் திளைத்த யோசியா அந்தப் பரிசுத்தத்தை உடனே மக்களுக்கும் வெளிப்படுத்த முயன்றான். மக்களும் அதற்கு பதிலளித்தார்கள். ஆண்டவருடைய வார்த்தையினால் யோசியா தாழ்மையடைந்தான். அவனுடைய தாழ்மையான கீழ்ப்படிதல் ஆண்டவரை சந்தோஷப்படுத்தியது.


2. யோசியாவின் பலங்களையும் சாதனைகளையும் விளக்கமாகக் காட்டுவோம்:

அ) யூதாவின் ஞானமுள்ள ராஜாக்களில் ஒருவன் யோசியா.
ஆ) ஆண்டவரைத் தேடி அவரை வரவேற்கக் காத்திருந்தான்.
இ) எசேக்கியாவைப்போல ஒரு சிறந்த சீர்திருத்தவாதியாய் இருந்தான்.
ஈ) ஆண்டவரின் ஆலயத்தைத் தூய்மையாக்கி அவரின் நீதிக்குக் கீழ்ப்படிவதை மீண்டும் துவக்கினான்.


3. யோசியாவின் பலவீனங்களும் தவறுகளும்:

யோசியா ஒரு பழுதற்ற ராஜா இல்லை. ஈடுபடவேண்டாம் என்று எச்சரிக்கப்பட்ட ஒரு ராணுவ போராட்டத்தில் ஈடுபட்டான். வடக்கு பிரதேசத்தைச் சேர்ந்த ஆயர்களைக் கொலை செய்தான்.


4. அவனுடைய வாழ்க்கையிலிருந்து பாடங்கள்:

அ) மனம் திருந்திய தாழ்மையான இருதயங்களையுடைய மக்களுக்கு ஆண்டவர் எப்பொழுதும் பதில் அளிக்கிறார்.
ஆ) மிகப்பரந்த வெளியரங்கமான சீர்திருத்தங்களுக்கு மிகச் சிறிய மதிப்பே உண்டு மக்களின் வாழ்க்கையில் மாற்றம் இல்லாவிட்டால்.


5. வேத ஆதாரங்கள்:

யோசியாவின் கதை 2 இராஜாக்கள் 21:24– 23:30; 2 நாளாகமம் 33:25–35:26 வரை உள்ள வசனங்களில் கூறப்பட்டுள்ளது. எரேமியா1:1–3; 22:11, 18 ஆம் வசனங்களிலும் கூறப்பட்டுள்ளது.


6. விவாதத்துக்குரிய கேள்விகள்:

6.1 யோசியா என்ற பெயருக்கு என்ன அர்த்தம்?
6.2 அவன் ஏன் சீர்திருத்தவாதி என்று அறியப்பட்டான்?
6.3 அவனுடைய பலவீனங்கள் என்ன?
6.4 ஆண்டவரின் வார்த்தையை அவர்கள் எங்கே கண்டுபிடித்தார்கள்?
6.5 ஆண்டவருடைய வார்த்தையை இப்பொழுது எங்கே கண்டுபிடிப்பீர்கள்?
6.6 யோசியாவின் வாழ்க்கையிலிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்போம்?

யூதா, ..

யோசேப்பின் சகோதரன். ( எகிப்தின் பிரதம மந்திரி).


முக்கிய வசனம்:

" யூதாவே, சகோதரர்களால் புகழப்படுபவன் நீயே; உன் கரம் உன் சத்துருக்களுடைய பிடரியின்மேல் இருக்கும். உன் தகப்பனுடைய புத்திரர் உன்முன் பணிவார்கள். யூதா பாலசிங்கம், நீ இரை கவர்ந்து கொண்டு ஏறிப்போனாய்; என் மகனே, சிங்கம்போலும் கிழச்சிங்கம்போலும் மடங்கிப் படுத்தான். அவனை எழுப்புகிறவன் யார்? சமாதான கர்த்தர் வருமளவும் செங்கோல் யூதாவைவிட்டு நீங்குவதும் இல்லை, நியாயப்பிரமாணிக்கன் அவன் பாதஙளைவிட்டு ஒழிவதும் இல்லை; ஜனங்கள் அவரிடத்தில் சேருவார்கள்". (ஆதியாகமம் 49:8-10)


சுருக்கமான கதை:
. யாக்கோபுக்கு லேயாளின் மூலம் பிறந்த நான்காவது குமாரன் யூதா.( ஆதியாகமம் 29:35)
. தன் சகோதரர்களுக்குள்ளே ஒரு தலைமைப் பொறுப்பை ஏற்றான். ( ஆதியாகமம் 38:26-27)
. யோசேப்பை அடிமையாக விற்க தன் சகோதரர்களுக்கு அறிவுறுத்தினான்.
. தன் மருமகளாகிய தாமாருக்கு செய்து கொடுத்த சத்தியத்தைக் காக்கத் தவறினான்.


1. முன்னுரை:
யூதா என்ற பெயருக்கு "போற்றுதல்" என்று பொருள். தலைவர்களாய் இருக்கும் மக்கள் பிரசித்தமாகத் தெரிவார்கள். தேவை ஏற்படும் வரை ஒரு குறிப்பிட்ட பாணியில் நடக்க மாட்டார்கள். அவர்களுடைய திறமைகள் வெளிப்படையாகப் பேசுவது, தீர்மானிக்கும் திறன், செயலாக்கம், கட்டுப்படுத்தும் திறமை ஆகியவை. இந்தத் திறமைகள் ஒரு பெரிய நன்மைக்கோ அல்லது பெரிய தீமைக்கோ பயன்படுத்த முடியும். அவனுடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகள் இந்தத் திறமைகளை செயல்படுத்த பல சந்தர்ப்பங்களைத் தந்தன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, யூதாவினுடைய தீர்மானங்கள் ஆண்டவருடைய திட்டங்களுக்கு ஒத்துழைக்கும் ஆசையால் அல்லாமல் அந்த நேரத்தின் பிரச்சினைகளின் அழுத்தத்தால் வடிவு பெற்றன. ஆனால், அவன் தன் தவறுகளை உணர்ந்த போது அதை ஒப்புக்கொள்ளத் தயாராக இருந்தான். தாமாருடன் அவனது அனுபவங்களும், யோசேப்புடன் ஏற்பட்ட கடைசி எதிர்முகத்தாக்குதலும், பழியை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கும் யூதாவின் குணத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். இதுவே யூதா தன் பின் சந்ததியானாகிய தாவீதுக்கு விட்டுச்சென்ற குணங்களில் ஒன்று.

யூதாவின் இந்த இயற்கையான வழி நடத்தும் திறமை நம்மிடம் இருக்கிறதோ இல்லையோ, தன் பாவத்துக்கு குருடாயிருக்கும் தன்மை நம்மிடம் இருக்கிறது. அனேக நேரங்களில் யூதாவைப்போல் தவறுகளை ஒத்துக்கொள்ளும் மனம் நம்மிடம் இருப்பதில்லை. நம்முடைய சிறுதவறுகள் பெரிய பாவத்துக்கு இழுத்துச் செல்லும் வரை நாம் காத்திருக்கக்கூடாது என்பதை நாம் யூதவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். நம்முடைய தவறுகளை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு, பழியை ஏற்றுக்கொண்டு, மன்னிப்பு கோருவதே சிறந்தது.

2. பலங்களும் சாதனைகளும்:
அ) யூதா இயற்கையிலேயே வழி நடத்தும் திறமை உள்ளவன்- வெளிப்படையாக பேசும் முடிவெடுக்கும் திறமையும் உள்ளவன்.
ஆ) மிகவும் நெருக்கடியான சூழ் நிலையில் தெளிவாக யோசித்து செயலாற்றியவன்.
இ) தான் சொன்ன வாக்குப்படியே நின்று தேவைப்பட்ட நேரத்தில் பழியையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்தான்.
ஈ) 12 பேரில் 4 வது குமாரன். அவன் வழியில்தான் ஆண்டவர் தாவீதையும் மேசியாவாகிய இயேசுவையும் இறுதியாகக் கொண்டு வருவார்.


3. பலவீனங்களும் தவறுகளும்:
அ) யோசேப்பை அடிமையாக விற்கும்படி தன் சகோதரர்களுக்கு கருத்துரைத்தான்.
ஆ) தன் மருமகளாகிய தாமாருக்குச் செய்து கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றத் தவறினான்.


4. அவன் வாழ்க்கையிலிருந்து பாடங்கள்:
அ) தற்போதைய சூழ்னிலையை மட்டுமல்லாமல் எதிர் காலத்தையும் கட்டுப்படுத்துபவர் ஆண்டவர்.
ஆ) பிறகு செய்யலாம் என்று தள்ளிப்போடுவது அனேக நேரங்களில் பிரச்சினைகளை இன்னும் மோசமாக்கும்
இ) பென்யமீனின் உயிருக்குப் பதிலாகத் தன் உயிரைக் கொடுக்க யூதா முன்வந்தது அவன் சந்ததியாகிய இயேசு எல்லா மக்களுக்காகவும் தன் உயிரைக் கொடுப்பார் என்பதைக் காட்டுகிறது.


5. வேத ஆதாரங்கள்:
யூதாவின் கதை ஆதியாகமம் 29:35-50; 26 ஆம் அதிகாரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. 1 நாளாகமம் 2-4 ஆம் அதிகாரங்களிலும் சொல்லப்பட்டிருக்கிறது.


6. விவாதத்துக்குரிய கேள்விகள்:
6.1 யூதா யார்? அவன் எப்படி யோசேப்புக்கு உதவினான்?
6.2 அவனுடைய பலவீனங்களும் தவறுகளும் என்ன?
6.3 அவன் தன் சகோதரனாகிய பென்யமீனை எவ்வாறு மற்ற சகோதரர்களுடன் எகிப்துக்குச் செல்லும்படி செய்தான்? (ஆதியாகமம் 43).
6.4 அவனுடைய வாழ்க்கையிலிருந்து நாம் கற்கும் பாடங்கள் என்ன?
6.5 தன் வழினடத்தும் திறமைகளை யூதா எவ்வாறு வெளிக்காட்டினான்?

சாத்ராக், மேஷாக், ஆபேத்ந�

பாபிலோனில் யூத இளவரசர்கள், ராஜ பணியாளர்கள் மற்றும் ஆலோசகர்கள்.
கரு வசனம்.
16. சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் ராஜாவை நோக்கி. நேபுகாத்நேச்சாரே, இந்த காரியத்தைக் குறித்து உமக்கு உத்தரவு சொல்ல எங்களுக்கு அவசியமில்லை.
17. நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார். அவர் எரிகிற அக்கினிச் சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார்.
18. விடுவிக்காமற் போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையை பணிந்துகொள்வதுமில்லை என்கிறது ராஜாவாகிய உமக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றார்கள்.

சுருக்கத் திரட்டு.
• பாபிலோனில் யூத தலைவர்கள்.
• சாத்ராக் - எரியும் உலையில் போடப்பட்ட பாத்திரம்
• மேஷாக் - தானியேலின் தோழன்.
• ஆபேத்நேகோ- அசரியா
• நட்பு சோதிக்கப்பட்டு பலப்பட்டது

1. அறிமுகம் - மூன்று நம்பிக்கை நாயகர்களின் கதை.

நாம் ஒவ்வொருவராக புரிந்துகொள்ள முயற்சிப்போம்.
1.1 சாத்ராக் .
அனனியாவுக்கு கொடுக்கப்பட்ட பாபிலோனிய பெயர் சாத்ராக். நேபுகாத்நேச்சாரின் அரசவைக்கு அடிமைகளாக கொண்டுவரப்பட்ட மூன்று யூத இளவரசர்களில் ஒருவன். இவன் தனது தேவனை மறுதலிக்காத காரணத்தினால் எரிகிற உலையில் போடப்பட்டான். (தானி1.7,2.49,3.12-30)

1.2 மேஷாக்.
மீஷாவேலுக்கு கொடுக்கப்பட்ட பாபிலோனிய பெயர் மேஷாக்.
தானியேலுடன் இருப்பவனாகவும், அவனுக்கு தோழனாகவும் காணப்பட்டான் (தானி1.7,2.49,3.12-30) மேஷாக் என்ற பெயரின் பொருள் ‘உறுதியில்லாத‘ அல்லது“நிலையற்ற‘ என்பதாகும்.

1.3 ஆபேத்நேகோ.
ஆபேத்நேகோ என்றால் நேகோ என்பவனின் வேலையாள் என்று பொருள். அதுதான் நேபோவாக ஆனது. இவனது உண்மையான பெயர் அசரியா என்பதாகும். யூதாவிலிருந்து பாபிலோனுக்குக் கொண்டுவரப்பட்ட நான்கு இளவரசர்களில் இவனும் ஒருவன். இந்த பெயரானது இவனுக்கு நேபுகாத்நேச்சாரின் பிரதானிகளின் தலைவனால் வழங்கப்பட்டது (தானி1.7). இவனும் தானியேலோடு இருப்பவனாகவும் அவனது தோழனாகவும் காணப்பட்டான். நேபுகாத்நேச்சாரினால் உருவாக்கப்பட்ட பொற்சிலையை, தூரா என்னும் சம பூமியில் வைத்து வணங்க மறுத்ததற்காக எரிகிற அக்கினிச்சூளையில் போடப்பட்டவனுமாவான்.(தானி. 3)


மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிமுக உரையிலிருந்து, இந்த தேவனுடைய மூன்று சாட்சிகளுடைய மற்ற அம்சங்களை புரிந்து கொள்ள நாம் முயற்சிசெய்வோம். சோதனை மற்றும் கஷ்டங்கள் நட்புகளை பெலப்படுத்தியிருக்கிறது. இது போன்றதொரு நட்பே தானியேலோடு கூட யூதாவிலிருந்து பாபிலோனுக்கு கொண்டுவரப்பட்ட மூன்று வாலிபர்களிடையேயும் காணப்பட்டது. நட்பின் உண்மையான அர்த்தம் என்னவென்று சிந்திக்க உதவுகின்றனர் இந்த சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள். இவர்களுடைய நட்பின் உறவானது இவர்கள் மரணத்தை எதிர் நோக்கின வேளையிலும் கூட ஒருபோதும் இவர்களது வாழ்க்கையில் தேவனுக்குறிய இடத்தை பறித்ததேயில்லை.

ஓன்றுசேர்ந்து ராஜாவாகிய நேபுகாத்நேசாரின் கட்டளைக்கேற்ப பொற்சிலையை வணங்காமல் அமைதியாக மறுத்தனர். இவர்கள் உற்சாகமான செயலை செய்கின்றனர், மற்றவர்கள் ஆர்வத்தோடு ராஜாவினிடத்தில் சென்று இவர்கள் ராஐ கட்டளையை மீறியதாக தெரிவிக்கின்றனர். அது உண்மையாக இல்லாத போதிலும், நேபுகாத்நேசார் தன்னை அவமானப்படுத்த அவன் விடவில்லை.

மரணம் அவர்களது நட்பிற்கு முடிவாக காணப்பட்டாலும், அவர்கள் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள தயாராக இல்லை. ஒவ்வொருவருக்கும் தேவன் மீது அதிக விசுவாசம் இருந்தது. இவர்கள் தேவனுடைய கரங்களில் தங்களுடைய உயிரை வைக்க தயங்கவே இல்லை, இதன் முடிவு வெற்றியாகவே காணப்பட்டது.

1. வல்லமையும் சாதனையும்
2.1 தானியேலோடு சேர்ந்து ராஜாவின் போஐனத்தை சாப்பிட மறுத்து எதிர்த்தனர்.
2.2 வெற்றி, தோல்வி, செல்வம், மரணம் ஆகிய இவைகளைக் கடந்து தங்களது நட்பின் மாறா தன்மையை நம்முடன் பகிர்கின்றனர்.
2.3 குற்றவாளிகளாக தீர்க்கப்பட்டு மரணத்தை எதிர்நோக்கின போதும் தங்களுடைய தேவன் மேலுள்ள நம்பிக்கையிலிருந்து சமரசமாக்க விரும்பாதவர்கள்.
2.4 எரிகிற நெருப்பு உலையிலும் பிழைத்திருந்தவர்கள்.

3. இவர்களது வாழ்க்கையிலிருந்து பாடங்கள்
3.1 நட்பு என்பது பயனுள்ள ஒன்று, ஆனால் அது நம்முடைய ஆழமான ஆன்மீக தேவைகளைப் பூர்த்தி செய்யாது. நம்முடைய உறவுகளால் குறிப்பாக நம்முடைய நெருங்கிய நண்பர்கள், தேவனை விட்டுவிட்டோமானால் அவர் நம்முடைய வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியமானவராக இருந்திருக்கிறார் என்பதை நாம் உணர முடியும்.
3.2 உண்மையான நட்பில் ஒரு பெரிய பெலமுள்ளது.
3.3 நாம் யாருடன் தண்டனையைப் பகிர்ந்து கொள்கிறோமோ அவர்களோடு நாம் நிற்பது அவசியாமான ஒன்று.
3.4 விளைவுகளை நம்மால் கணிக்க முடியாத போது கடவுள் ஒருவரே நம்பிக்கைக்கு உரியவராகிறார்.
3.5. தேவன் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுக்கு அளித்த விடுதலையானது, அடிமைத்தனத்திலிருந்த யூதர்களின் நம்பிக்கைக்குக் கிடைத்த வெற்றி எனலாம். இவர்கள் தீங்கிலிருந்து காக்கப்பட்டார்கள், இவர்கள் சோதனைகளிலிருந்து தேற்றப்பட்டார்கள். தேவன் மகிமைப்பட்டார் அவர்களுக்கும் சன்மானங்கள் (வெகுமதிகள்) வழங்கப்பட்டன. இந்த வாலிபர்களை நெருப்பும் வெப்பமும் சிறிதளவும் தொடவே இல்லை. தேவன் நம்மை விடுவிப்பாரானால் எந்த ஒரு மனிதனாலும் நம்மை கட்டிவைக்கவே முடியாது.

4. வேதாகம மற்றும் பிற குறிப்புக்கள்
4.1 சாத்ராக்(அனனியா), மேஷாக் (மீஷாவேல்), ஆபேத்நேகோ(அசரியா) என்பவர்களின் கதையானது தானியேல் எழுதின புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளது.
4.2 எ.ஆர்.பக்லேன்ட், த யூனிவர்சல் பைபிள் டிக்ஷனரி pp.438;, p.314, p.2
4.3 என்.ஐ.வி. ஸ்டடி பைபிள். p1483
4.4 தி ஐ.டி.பி(p.302) சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ

5. கலந்தாலோசனைக்கான கேள்விகள்
5.1 தேவனின் மூன்று நம்பிக்கையுள்ள சாட்சிகள் யார்?
5.2 அவர்கள் எப்படி சோதிக்கப்பட்டார்கள்?
5.3 அவர்களது நம்பிக்கையை விட்டுக்கொடுத்தார்களா?
5.4 கற்றுக்கொண்ட பாடங்களை குறிப்பிட்டு காண்பி.
5.5 சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களின் நட்பினை குறிப்பிட்டு கூறு.

அப்பொல்லோ..

அப்போஸ்தலர் புத்தகத்தில் உள்ள ஒரு மிஷனரி

25 அவன் கர்த்தருடைய மார்க்கத்திலே உபதேசிக்கப்பட்டு, யோவான் கொடுத்த ஸ்நானத்தை மாத்திரம் அறிந்தவனாயிருந்து, ஆவியில் அனலுள்ளவனாய்க் கர்த்தருக்கு அடுத்தவைகளைத் திட்டமாய் போதகம் பண்ணிக்கொண்டு வந்தான்.
26. அவன் ஜெப ஆலயத்தில் தைரியமாய்ப் பேசத்தொடங்கின போது, ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் அவன் பேசுகிறதைக் கேட்டு, தேவனுடைய மார்க்கத்தை அதிக திட்டமாய் அவனுக்கு விவரித்துக் காண்பித்தார்கள். (அப்போஸ்தலர் 18.25-26)

சுருக்கத்திரட்டு
• ஓர் அலெக்ஸாண்டிரிய யூதன்(அப்போ18.24)
• இவனுக்கு இயேசுவின் கதையைக் குறித்த துல்லிய அறிவு இருந்தது.
• பழைய ஏற்பாட்டினை நன்கு புரிந்து கற்றவனாயும், இயற்கையாகவே சொல்திறன் (வாய்மை) உடையவனாயும் காணப்பட்டான்.
• ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளுமாகிய இருவரும் இவனுக்கு இயேசுவைக் குறித்து முழுமையாய் தெரிந்துகொள்ள உதவினார்கள்.
• அப்பொல்லோவின் வளமான சொல்திறனால் அப்பொல்லோ மற்றும் பவுல் ஆகிய இவர்களிடையே பிரிவுகள் முளைத்திருக்கலாம்.



1. அறிமுகம் - இவனது கதை
சிலர் இயற்கையாகவே பொது அவைகளில் வியக்கத்தக்க பேசும் ஆற்றலைப் பெற்றிருப்பர். சிலர் அதோடு கூட ஒரு பெரிய செய்தியையும் எடுத்துச் சொல்லிவிடுகின்றனர். எபேசுவிலிருந்து பவுல் புறப்பட்ட சில நாட்களில் அப்பொல்லோ எபேசுவிற்கு வந்து ஒரு தாக்கத்தை உண்டுபண்ணுகிறான். பொது மக்களிடையே தைரியமாய் பேசுகிறான். பழைய ஏற்பாட்டிலுள்ள வேதவாக்கியங்களை திருஷ்டாந்தப்படுத்தி பேசுகிறவனாயிருந்தான். இவன் கிறிஸ்தவத்தை எதிர்ப்பவர்களிடம் கட்டாயத்துடனும் திறமையுடனும் விவாதித்தான். ஆக்கில்லா பிரிஸ்கில்லா ஆகிய இவர்களின் கவனத்தில் வருவதற்கு அதிகநேரம் பிடிக்கவில்லை.

அப்பொல்லோவிற்கு முழு கதையும் தெரியவில்லை என்று இந்த இரண்டு பேருக்கும் தெரிந்துவிட்டது. இவனுடைய பிரசங்கமெல்லாம் பழைய ஏற்பாட்டையும், யோவான் ஸ்நானகனின் போதனையையும் அடிப்படையாக கொண்டிருந்தது. இவன் ஜனங்களைப் பெரும்பாலும் மனந்திரும்பவும், மேசியாவின் வருகைக்கு ஆயத்தமாகும்படியாக வற்புறுத்துகிறவனாகவும் காணப்பட்டான். ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளுமாகிய இவர்கள் அவனைத் தங்களது வீட்டிற்கு அழைத்துச் சென்று இப்போது நடந்து முடிந்த எல்லா விவரங்களையும் இயேசுவின் வாழ்க்கை, அவருடைய மரணம், அவரின் உயிர்தெழுதல், மேலும் பரிசுத்த ஆவியின் வரவு இவைகளைக் குறித்து இவனுக்கு விளக்கிக் கூறினார்கள். அப்பொல்லோ இப்போது ஒவ்வொரு சுவிசேஷமாக படிப்படியாக புரிந்து தெளிவு பெற்றதோடு மட்டுமல்லாது ஒரு புது சக்தியால் நிறைந்தவனாயும் தைரியமுடையவனாயும் சுவிசேஷத்தின் வேலையை நிறைவேற்றினான்.

பின்பு அவன் அகாயா நாட்டிற்குப் போக வேண்டுமென்றிருக்கையில், சீஷர்கள் அவனை ஏற்றுக்கொள்ளும்படி சகோதரர் அவர்களுக்கு எழுதினார்கள் (அப் 18.27). அவன் கொரிந்து பட்டணத்தில் வல்லமையான பேச்சாளனாக விரைவில் மாறினான். சுவிசேஷத்தை எதிர்ப்பவர்களிடம் பொது இடங்களிலேயே விவாதித்தான். சில வேளைகளில் இவனுடைய திறமைகள் இறுதியில் பிரச்சினைகளையே உருவாக்கியது. கொரிந்திய மக்கள் சிலர் இவனது செய்தியை விட்டு இவனைப் பின்பற்ற ஆரம்பித்தனர். கொரிந்தியர்களிடையே இருந்த பிரிவினைகள் காரணமாக பவுல் அவர்களை எதிர்க்க வேண்டியதாயிருந்தது. அவர்களுக்குப் பிடித்த போதகரது பெயரை வைத்து சிறிய குழுவாக உருவாக்கினர். அப்பொல்லோ கொரிந்துவை விட்டபின் மீண்டும் அங்கு வர தயங்கினான். பவுல் பிரியமாக எழுதும்போது அப்பொல்லோ உடன் ஊழியன் என்றும் கொரிந்துவிலே பவுல் நட்டதான சுவிசேஷ விதைகளுக்கு நீர்ப்பாச்சினவன் என்றும் எழுதுகிறார். அப்பொல்லோ இன்னும் ஒரு சுவிசேஷ பிரயாண பிரதிநிதியாக தீத்துவின் உதவியை நாடுகிறவனாகவே காணப்பட்டான். கடைசியாக தீத்துவுக்கு பவுல் எழுதும்போது அப்பொல்லோவுக்கு ஒரு குறைவும் இல்லாதபடி ஜாக்கிரதையாக விசாரித்து வழியனுப்பும்படி கோருகிறார்.

இவனது இயற்கைத்திறன் அவனை பெருமைப்பட வைத்தாலும், இவன் கற்றுக்கொள்ள ஆர்வமுள்ளவன் என்பதை நிருபிக்கிறான். அப்பொல்லோவிற்கு முழு சுவிசேஷத்தையும் வழங்கத்தக்கதாக ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளுமாகிய இவர்கள் பவுலிடத்தில் பல மாதங்களாக கற்று அறிந்திருந்தனர். ஏனெனில் அப்பொல்லோ ஒரு மாணவனாக இருக்க தயங்கினதே இல்லை. இவன் ஓர் ஆசிரியரைக் காட்டிலும் மேலானவனானான். எவ்வளவு தூரம் நம்முடைய ஆர்வம் கற்றுக்கொள்வதற்கு இல்லையோ அது தேவன் நம்மை என்னவாக வைக்க திட்டமிட்டுள்ளாரோ அதைப் பாதிக்கும்?


2.வல்லமையும் சாதனையும்
2.1 சொல்வண்மை மற்றும் வாதம் செய்து தன் சமயம் ஆதரிக்கும் வரம்பெற்ற ஒரு போதகனாக ஆரம்ப கால சபைகளில் காணப்பட்டான்.
2.2 கற்றுக்கொள்ள விரும்புகிறவனாகவும் காணப்பட்டான்.
2.3 எபிரேயர் நிருபத்தை எழுதினவர்கள் யாரென்று தெரியாத நிலையில், இவன் எழுதியிருக்கலாம்; என எண்ணத்தோன்றுகிறது.


3. இவனது வாழ்க்கையிலிருந்து பாடங்கள்
3.1 நற்செய்யதியை தேவனுடைய சக்திகொண்டு திறம்பட துல்லியமாக வெளிப்படுத்துதல்
3.2 விசுவாசிகளல்லாதவர்களுக்கு சுவிசேஷத்தின் உண்மையான பொருளை தெரிவிக்கும் தெளிவான வாதம் விசுவாசிகளுக்கும் ஊக்கமாக அமைகிறது.


4. வேதாகமக் குறிப்புகள்
அப்பொல்லோவின் கதையானது அப்போஸ்தலர்18.24-28,19.1, 1கொரிந்தியர்1.12,3.4-6,22,4.1,6,16.12; மற்றும் தீத்து3.13லும் கூறப்பட்டுள்ளது.

5. கலந்தாலோசனைக்கான கேள்விகள்
5.1 சுவிசேஷத்தை பரப்புவதில் இவன் உதவினது எப்படி?
5.2 இவனது சிறந்த திறமைகளைக் மேற்கோள் காட்டு?
5.3 இவனுக்கு இயேசுவைக் குறித்து கற்றுக்கொடுத்தது யார்?
5.4 இவன் சுவிசேஷ விதைகளுக்கு எப்படி நீர்ப் பாய்ச்சினான்?
5.5 ஆரம்ப கால சபைகளின் பிரிவுகளுக்கு எப்படி இவன் காரணமானான்?

கோராகு..

ஆசாரியனாகிய லேவியின் பேரன்.


முக்கிய வசனம்:

"பின்னும் மோசே கோராகை நோக்கி: லேவியின் புத்திரரே, கேளுங்கள்; கர்த்தருடைய வாசஸ்தலத்தின் பணிவிடைகளைச் செய்யவும், சபையாரின் முன் நின்று அவர்கள் செய்யவேண்டிய வேலைகளைச் செய்யவும், உங்களைத் தம்மண்டையிலே சேரப்பண்ணும்படி இஸ்ரவேலின் தேவன் இஸ்ரவேல் சபையாரிலிருந்து உங்களைப் பிரித்தெடுத்ததும், அவர் உன்னையும் உன்னோடேகூட லேவியின் புத்திரராகிய உன்னுடைய எல்லாச் சகோதரரையும் சேரப்பண்ணினதும், உங்களுக்கு அற்பகாரியமோ? இப்பொழுது ஆசாரியப்பட்டத்தையும் தேடுகிறீர்களோ?" (எண்ணாகமம் 16:8–10).


சுருக்கமான கதை:

. ஒரு லேவியன் தன்னாலேயே ஆசாரியன் இல்லை.
. பொறாமையால் தூண்டப்பட்டு மோசேக்கு எதிராக ஒரு கட்சியைத் துவக்கினான்.
. அவனுடைய குறையுள்ள தீர்மானிக்கும் திறமையால் தன் வேலையையும், சேவை செய்யும் நிலைமையையும், தன் உயிரையும் இழந்தான்.
. அவன் பேராசையே அவனுடைய அழிவுக்குக் காரணம் ஆயிற்று.


1. முன்னுரை: கோராகின் கதை.

கோராகு என்ற பெயருக்கு வழுக்கை என்று பொருள். யாத்திரையின் காலத்தில் கோராகு ஒரு புகழ் பெற்ற, மிகுந்த செல்வாக்கு பெற்ற தலைவனாய் இருந்தான். இஸ்ரவேலின் முக்கியமான மனிதர்களுள் ஒருவனாக அவன் குறிப்பிடப்பட்டுள்ளான் (யாத்திராகமம் 6). ஆண்டவருடைய ஆசரிப்புக் கூடாரத்தில் சிறப்பான சேவை செய்ய நியமிக்கப்பட்ட முதல் லேவியரில் கோராகும் ஒருவன்.

கோராகு லேவியின் குமாரரில் ஒருவன். ஆனால், அவன் தன் உறவினராகிய மோசே, ஆரோன் ஆகியோரின் அதிகாரத்தைக் கண்டு பொறாமைப்பட்டு, அவர்களுக்கு எதிராக ஒரு கட்சியைத் துவக்கினான். தாத்தான், அபிராம் ஆகியோரையும், லேவியரில் முக்கியமான 250 பேரையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டான் ( எண்ணாகமம் 16). அவனும், அவனைப் பின் பற்றியவர்களும் ஒரு பூகம்பத்தில் சிக்கி, தீயிலே அழிந்து போனார்கள்.


ஒரு லேவியனாக கோராகு ஆசரிப்பு கூடாரத்தின் தினசரி வேலைகளில் உதவி செய்தான். ஆண்டவருக்கெதிராக இஸ்ரவேல் மேற்கொண்ட பெரிய கிளர்ச்சிக்குப் பிறகு (எண்ணாகமம் 13:14), கோராகு தன்னுடைய சிறிய கிளர்ச்சியைத் தொடங்கினான். குறைகளைக் கேட்கும் ஒரு செயற்குழுவை ஆரம்பித்து மோசேயையும் ஆரோனையும் எதிர்கொண்டான். அவர்களுடைய குறைகளின் பட்டியலை இந்த மூன்று வாக்கியங்களில் அடக்கலாம்:


1. நீ மற்ற யாரையும் விடச் சிறந்தவன் இல்லை.
2. இஸ்ரவேலில் உள்ள ஒவ்வொருவரும் ஆண்டவரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
3. நாங்கள் உமக்குக் கீழ்ப்படியத் தேவையில்லை.

கோராகு முதல் இரண்டு வாக்கியங்களையும், தவறான முடிவை எடுப்பதற்காக தனக்குத் தேவையானபடி மாற்றிக்கொண்டான்.

அனைத்து இஸ்ரவேலரும் வழி நடத்துவதற்காகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை. கோராகின் மறைவான கோரிக்கை: " வழி நடத்திச் செல்வதற்கு மோசேக்கு இருந்த எல்லா உரிமையும் எனக்கும் உண்டு" என்பதுதான்.அவனுடைய இந்தத் தவறு அவனுடைய வேலையையும், சேவை செய்யும் நிலைமையையும் மட்டுமல்லாமல், அவனுடைய உயிரையும் இழக்கச் செய்தது.

ஆண்டவருடைய வார்த்தையின் ஒரு பாகத்தை மட்டும் நம்முடைய தேவைக்கு ஆதரவாகப் பயன் படுத்தக் கூடாது என்று நாம் எச்சரிக்கபட்டிருக்கிறோம். நம்முடைய ஆசைகளை உருவகப்படுத்த அவர் வார்த்தையை முழுமையாக அனுமதிக்க வேண்டும். பதவியிலும், அதிகாரத்திலும் நாம் திருப்தி அடையக்கூடாது. நம்முடைய பதவியின் மூலமாக நம்மைப் பயன்படுத்த ஆண்டவர் விரும்பக் கூடும்.


2. கோராகின் வாழ்க்கையிலிருந்து பாடங்களை நாம் எவ்வாறு புரிந்து கொள்ளலாம்?

ஆண்டவர் தன்னை வைத்திருக்கும் அந்த முக்கியத்துவமுள்ள பதவியைப் புரிந்து கொள்ள கோராகு தவறி விட்டான். அவனுடைய போராட்டம் மோசேக்கு எதிராக அல்ல அவனைவிட மிகப் பெரியவரான ஒருவருக்கு ( ஆண்டவர்) என்பதை மறந்து விட்டான். அவனுடைய பேராசை அவன் பகுத்தறிவைக் குருடாக்க அனுமதித்தான்.


3. முடிவுரை:

சில நேரங்களில் குறிக்கோளுக்கும் பேராசைக்கும் இடையே ஒரு மிக மெல்லிய கோடே உள்ளது. நம்மிடம் இருப்பதைக் குறித்து நாம் திருப்தி இல்லாதவர்களாக இருந்தால், இருப்பதையும் நாம் இழக்க நேரிடும்.


4. வேத ஆதாரங்கள்:

கோராகின் கதை எண்ணாகமம் 16:1–40 வசனங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. எண்ணாகமம் 26:9; யூதா 11 லும் சொல்லப்பட்டிருக்கிறது. அவனுடைய சந்ததியார் பாடகர்களின் சங்கம் ஒன்றை ஆரம்பித்து இருக்கக்கூடும். ஏனெனில், சில சங்கீதங்களின் தலைப்புகளில் அவர்களைப்பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. (எ.கா. சங்கீதம் 87, 88).


5. விவாதத்துக்குரிய கேள்விகள்:

5.1 கோராகு யார்?
5.2 அவன் எவ்வளவு நல்லவன்?
5.3 மோசேக்கு எதிரான அவனுடைய குற்றச்சாட்டுகள் என்ன?
5.4 அவனுடைய வீழ்ச்சிக்குக் காரணம் என்ன?
5.5 அவனுடைய வாழ்க்கையில் இருந்து நாம் கற்கும் பாடம் என்ன?
5.6 உங்கள் ஆலயத்தில் ஒற்றுமையின்மைக்குக் காரணங்கள் என்ன?

பர்த்தொலொமேயு ..

கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களில் ஒருவன்

கரு வசனம்
அவர்கள் அங்கே வந்தபோது மேல்வீட்டில் ஏறினார்கள்; அதில் பேதுருவும், யாக்கோபும், யோவானும், அந்திரேயாவும், பிலிப்புவும், தோமாவும், பர்த்தொலொமேயும், மத்தேயும், அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபும், செலோத்தே என்னப்பட்ட சீமோனும், யாக்கோபின் சகோதரனாகிய யூதாவும் தங்கியிருந்தார்கள். அப்போஸ்தலர் 1:13

சுருக்கத்திரட்டு
• இயேசுவின் சீடர்கள் பன்னிருவருள் அறியப்படாத ஒரு சீடன்.
• இவன் தொலொமேயுவின் குமாரன். தொலொமேயு என்பதற்கு உழவன் என்பது பொருள். பர்த்தொலொமேயு என்பதற்கு தொலொமேயுவின் மகன் என்று பொருள்படும். தொலொமேயு என்றால் போர்வீரன் என்பது பொருள்.
• இயேசுவின் சீடர்களில் ஒருவன் இவனை இயேசுவிடம் அழைத்து வந்திருக்கலாம்.
• பர்த்தொலொமேயு இந்தியாவில் மிஷனரியாக பணியாற்றியபோது இரத்த சாட்சியாக மரித்தார் என்கின்றனர்.

1.அறிமுகம் - இவனது கதை
மேற்கு மலேசியா மறை மாவட்டம் மற்றும் சிங்கப்பூர் மறை மாவட்டம் ஆகிய இவ்விரண்டும் பரி.பர்த்தொலொமேயுவின் நாளில் நிறுவப்பெற்றது. நம்முடைய முதல் பேராயராகிய பெர்குசன் டேவி 1909 வருடம் பேராயராக நியமனம் பெற்றார். இவரது ஓய்வுக்கு பின், இவர் ஆபிரிக்கா செல்வதற்கு முன்னர், ஹிந்தி மொழியைப் பயின்று இந்தியாவில் மிஷனரியாக பணியாற்றினார்.

2.யார் இந்த பர்த்தொலொமேயு?
இயேசு கிறிஸ்துவின் 12 சீடர்களில் ஒருவன். இவன் பர்த்தொலொமேயு என அழைக்கப்பட்டான். சிலர் இவனை யோவான் 1ஆம் அதிகாரத்தில் காணப்படுகிற நத்தானியேல் என கருதுகின்றனர். இயேசு தண்ணீரை திராட்சைரசமாக மாற்றிய, கலிலேயாவில் உள்ள கானா ஊரைச் சேர்ந்தவன். இந்தத் தண்ணீரைப் போல பர்த்தொலொமேயுவும் மாற்றம் பெற்றான். அர்மேனியா மற்றும் இந்தியா ஆகிய இத்தேசங்கள் இவனுடைய பணித்தளங்கள் என கூறப்படுகிறது. இவன் இரத்த சாட்சியாக மரித்த பின்பு தலைகீழாக சிலுவையில் அடிக்கப்பட்டான் என்று கூறுகின்றனர். இது சீஷத்துவத்துக்குக் கொடுக்கப்படுகிற மதிப்பு எனலாம். அநேகருக்கு இந்த சீஷத்துவம், இயேசுவின் சீடனாக இருத்தல், இரத்தசாட்சியாக மரித்தல் ஆகிய இவைகளின் மதிப்பு தெரிவதில்லை.

3. நாம் பர்த்தொலொமேயுவிடம் கற்றுக்கொள்வது என்ன?
பர்த்தொலொமேயுவின் வாழ்க்கையில் குறைந்தது 3 பெரிய கவலைகள் இருந்திருக்கக் கூடும். அவையாவன
(i) சீஷத்துவம் - ஒரு மாணவனாக இருப்பது
(ii) அப்போஸ்தலத்துவம் - மக்களிடத்திற்கு அனுப்பப்படுபவன்
(iii) இரத்த சாட்சியாக மரித்தல் - பாடு அனுபவித்து பலியாதல்
இந்த மூன்றும் மலேசியாவிலும் மற்ற நாடுகளிலும் தேவனுடைய சபையின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் அத்தியாவசியமான ஒன்றாகும்.

(i) சீஷத்துவம் :
பர்த்தொலொமேயு இயேசுவின் 12 அப்போஸ்தலர்களில் ஒருவன் என மத்தேயு 10:3 நமக்கு உறுதிப்படுத்துகிறது. இயேசு இவனைத் தெரிந்துகொள்ளும்போது ஒரு மாணவனாக (சீஷனாக) இருக்கும்படித்தான் இவனை அழைக்கிறார். SIKH என்றால் என்னவென்று நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? சான்ஸ்கிரிட் (Sanskrit)) மொழியில் இதன் பொருள் மாணவன் என்பதாகும். இயேசுவின் மாணவன் அல்லது சீஷன் என்பது வாழ்க்கை முழுவதற்குமான தொழில் போன்றது. இயேசுவின் சீடர்கள் இயேசுவின் குழுவோடு இருந்தனர். நமக்க குருவானவரும் இயேசு தான். நெருங்கிய உறவு அதிகம் கற்க உதகிறது. சுவிசேஷத்தை அறிவிக்கிறவனாயும் அதன்படி நடக்கிறவனாயும் இருக்கிற அப்போஸ்தலனாக இருப்பதே நம்முடைய பணிகளில் ஒன்று. அப்போஸ்தலனாவதற்கு முன்பு தேவனின் வார்த்தைகளை கற்றறிந்து பரிசுத்த ஆவியின் கண்காணிப்பில் நடத்தப்படவேண்டும். ஒரு கிறிஸ்தவன் கர்த்தருடைய ஆயுதமாகிய அவருடைய வார்த்தையையும் பரிசுத்த ஆவியையும் தரித்திருக்க வேண்டும். நம்முடைய முதன்மைப்பணி என்னவெனில் கிறிஸ்துவின் சீடனாக அல்லது மாணவனாக இருப்பதே (முரிட் / சீக்). இது வாழ்கை முழுவதற்குமான ஒரு பணி. இயேசு எப்போதும் எங்கேயும் அவர்களுடைய சூழ்நிலையை கருதாது தம்மைப் பின்பற்றும்படி அழைக்கிறார்.

(ii) நம்முடைய இரண்டாவது நோக்கம் கிறிஸ்துவின் அப்போஸ்தலனாதல்
இயேசு தேவனுடைய மிஷனரியாக பூமியிலிருந்து இவ்வாறு சொல்லுகிறார் “பிதா என்னை அனுப்பினது போல நானும் உங்களை அனுப்புகிறேன்” (யோவான் 20:21). அவர் நமக்கு வல்லமையும் அதிகாரமும் கொடுத்து அனுப்புகிறார். (மாற்கு 6:7-8 & 12). இந்த அப்போஸ்தலர்கள் தங்கள் வீடுகளை விட்டு அனைவரும் தேவனிடத்தில் திரும்புங்கள் என்று கூற ஆரம்பித்தனர். இந்த கிறிஸ்தவ சாட்சியின் ஊழியத்திலே எப்பொழுதும் புறக்கணிக்கும் சாத்தியங்கள் உள்ளன. அதற்கு நாம் ஆயத்தமாயிருக்க வேண்டும்.
நமக்கு வளருகின்ற சபைகளும் பராமரிக்கின்ற சபைகளும் உள்ளன. வளர்கின்ற சபையானது அனுப்புகின்ற சபையாகவும் காணப்படுகிறது.

(iii) இரத்த சாட்சியாக மரித்தல்
நம்முடைய மூன்றாவது கவலையானது இரத்த சாட்சியாக மரித்த பர்த்தொலொமேயு பற்றினது. இரத்த சாட்சி என்ற வார்த்தையின் பொருள் சாட்சியாதல் என்பதாகும். இரத்த சாட்சிகளினுடைய இரத்தமானது “சபையின் விதை” என சபையின் மிஷனரி ஊழியங்களைக் குறித்து ஆராய்ச்சி செய்கின்ற (missiologist) ஒருவர் கூறுகின்றார். மலேசியாவிற்கு நம்பிக்கையான, அற்பணிக்கக் கூடிய, பலியாகக்கூடிய கிறிஸ்தவ மிஷனரிகள் தேவைப்படுகிறார்கள்.

4. வேதாகமக் குறிப்புக்கள்
சுவிசேஷங்களும் அப்போஸ்தலர் நடபடிகளும் பர்த்தொலொமேயுவைக் குறித்து அறிய உதவுகின்றன.

5. கலந்தாலோசனைக்கான கேள்விகள்
5.1 சீஷத்துவம், அப்போஸ்தலத்துவம் மற்றும் இரத்த சாட்சி இவைகளின் பொருளை மேற்குறியிட்டு காட்டு.
5.2 மலேசியா மற்றும் சிங்கப்பூர் மண்டலங்கள் எப்போது ஆரம்பமாயின?
5.3 இந்த மண்டலத்தின் முதல் பேராயர் யார்?
5.4 பர்த்தொலொமேயு எப்படி இரத்த சாட்சியாக மரித்தான்?
5.5 நாம் எவ்வாறு மிஷனரிகளுக்கு உதவ முடியும்?

கிதியோன்..

இஸ்ரவேலின் ஜந்தாவது நியாதிபதியும், ஓர் இராணுவ போர் வியூகம் (அ. போர் தந்திரி) வகுப்பாளனும் ஆவான்.

கருவசனம்
15 அதற்கு அவன்: ஆ என் ஆண்டவரே, நான் இஸ்ரவேலை எதினாலே ரட்சிப்பேன்; இதோ, மனாசேயில் என் குடும்பம் மிகவும் எளியது; என் தகப்பன் வீட்டில் நான் எல்லாரிலும் சிறியவன் என்றான்.
16 அதற்குக் கர்த்தர்: நான் உன்னோடேகூட இருப்பேன்; ஒரே மனுஷனை முறிய அடிப்பதுபோல நீ மீதியானியரை முறிய அடிப்பாய் என்றார்.
(நியாயாதிபதி 6:15, 16)

கதைச் சுருக்கம்
• நியாதிபதியாகிய இவன் இஸ்ரவேலை நாடோடி ஜனமாகிய மீதியானியரிடத்திலிருந்து கடாச்சித்தவன்.
• கிதியோன் என்ற பராக்கிரமசாலி எப்படிப் பட்டசவால்களையும் சர்வசாதாரனமாக சமாளித்து விடுகிறவன்.
• கிதியோனை நெற்கதிர்களைத் தரையில் அடித்துக் கொண்டிருக்கும் பொழுது யெகோவா தேவன் அழைத்தார்.
• மீதியானியரின் இராணுவத்தை ஜெயங் கொண்டவன்.

முன்னுரை
யெகோவா தேவன் சர்வ சாதாரன ஜனங்களைக் கொண்டு அவரின் திட்டத்தை நிறைவேற்ற முடியும். ஏன்? உங்களையும் என்னையும் கூட அவர் பயன்படுத்துவார். நாம் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள எப்படிப் பட்ட ஊழியமாயிருந்தாலும் சரி, அதைக் கண்ணும் கருத்துமாயும் மிகவும் துல்லியமாயும் செய்திட வேண்டும்.

கிதியோன் என்றால் ‘பதரை தூற்றுகிறவன்‘ அல்லது ‘போர் அடிக்கிறவன்‘ என்று பொருள்படும். கிதியோன் மனாசே கோத்திரத்தானும், யோவானின் மகனும் ஆவான். அவனை ‘யெருபாகால்‘ (நியா.6:32) என்றும், ‘எருப்பேசேத்‘ (2சாமு.11.21) என்றும் அழைத்த்துண்டு.

யெகோவா தேவனின் அழைப்பு மிகவும் பிரமிக்க வைக்கிற விதமாக கிதியோனுக்கு உண்டானது. ஏழு வருடங்கள் மிகவும் கஷ்டப்பட்ட இஸ்ரவேல் ஜனங்களை மீதியானியரிடமிருந்து இரட்சிக்க, கிதியோன் யெகோவா தேவன் தெரிந்து கொண்டார். கானான் தேசத்தில் வசித்த இஸ்ரவேல் ஜனங்களின் நெல் விளைச்சள்களையும் ஆடு மாடுகளையும், மிகவும் ஈவு இரக்கமற்ற முறையில் வாரிக் கொண்டு மீதியானியர் வருடா வருடம் சென்றார்கள். கிதியோனின் போர் வியூகம் வகுத்து, மீதியான் ஜனங்களிடம் இரவு வேளையில், பாளையில் பயங்கர பயணத்தை மூட்டி, கட்டுக்கோப்பில்லா இராணுவ வீர்ர்களை விரட்டியடித்தான். திடீர் என்று தீவெட்டியின் வெளிச்சமும், பல முறை எதிரொலிக்கும் எதிரொலியும் முந்நூறு பேர்களின் எக்காள தொனியும் கடுங் கலக்கத்தையும் பலத்தையும் தீதியானியரின் படையினரிடம் உண்டாகி, தாங்களுக்குள்ளே ஒருவரோடு ஒருவர் வெட்டிக் கொண்டு தோற்றுப் போய் விரட்டியடிக்கப்பட்டனர். கிதியோன், இஸ்ரவேலை 50 ஆண்டுகள் நியாயம் விசாரித்தான். அவன் ஐந்தாவது நியாதிபதியும் கூட, கிதியோன் இஸ்ரவேலின் ராஜாவாக தாம் நியமிக்கப்படுவதை விரும்பவில்லை. நாளடைவில் கிதியோன் விக்கிர ஆராதனைக்குத் தன்னை ஒப்புக் கொடுத்து, தனக்கும் தன் குடும்பத்திற்கும் கன்னியையும் கேடையும் வரவழைத்துக் கொண்டான். இருந்த பொழுதும் அவன் எபிரேயர் 11.32ல் பெருமையாய் மதிக்கப்பட்டு எழுதப்பட்டுள்ளது (நியா.6:14-27); 8:1-24ஐ வாசிக்கவும்).

கிதியோனின் கதையை ஆராய்ந்து பர்ர்ப்போம்.
a. கிதியோனின் தினசரி சவால், தன் குடும்பத்திற்கு உணவை சேகரிப்பதாகும். மீதியான் ஜனங்கள் இஸ்ரவேல் ஜனங்களின் விவசாயத்திற்குப் பெருந் தடையாய் விளங்கினார்கள்.
b. கிதியோன் பராக்கிரமசாலி ஆவான். மேல் கூறப்பட்ட சவாலை சமாளிக்க தன்னுடைய நெற்கதிர்களைப் போரடிக்க, திராட்சரச ஆலையையே போரடித்தான்.
c. யெகோவா தேவன் தன்னுடைய தூதனோடு தன்னுடைய சவால் மிக்க செய்தியைக் கொடுக்க கிதியோன் தன் நெற்கதிர்களைத் திராட்சரச ஆலையினுள் போரடித்துக் கொண்டிருக்கும் போது அனுப்பினார்.
d. தேவ தூதன் மூன்று முறை கிதியோனின் தட்டிக்கழித்தலை சமாளித்து அவனைச் சம்மதிக்க வைக்கிறார்.
- கிதியோன் தன் குடும்பத்தின் ஜீவனை அம்ச காரியங்களைக் குறித்து அக்கறையும் கரிசனையும் உள்ளவனாயிருந்தான்.
- யெகோவா தேவனின் அழைப்பைக் குறித்து அவனுக்கு சந்தேகம் இருந்தது. அவ்வழைப்பை ஏற்க மறுத்து விட்டான்.
- தனக்குக் கொடுக்கப்பட்ட ஊழியத்தைச் சரிவர செய்ய முடியாமல் போய் விடுமோ என்ற உணர்வின் நிமித்தம், யெகோவா தேவனின் அழைப்பை ஏற்க மறுத்து வட்டான்.
e. கிதியோனுக்கு பெலவீனங்களும் தோல்விகளும் ஏற்பட்டதுண்டு. இருப்பினும் அவன் யெகோவா தேவனுக்குக் கீழ்ப்படிந்து, அவன் தன் கரங்களில் ஒப்படைக்கப்பட்ட ஊழியங்களைச் செம்மையாய் செய்திட்டான்.

4. கற்றுக் கொண்ட பாடங்கள
1. யெகோவா தேவன், தற்போது நம்மிடம் இருக்கும் சொற்ப கீழ்ப்படிதலின் மத்தியிலிருந்து நம்மை அழைக்கிறார். நாம் அவ்வழைப்பை ஏற்று உத்தமும் உண்மையுமாயிருப்பின் மேன்மேலும் பொறுப்புகளைத் தருவார்.
2. யெகோவா தேவன் தமக்குள் தேங்கியிருக்கும் (அல்லது புதைந்திருக்கும்) அபரிவிதமான ஆற்றலைப் பயன்படுத்தி, மென்மேலும் வலுப்பெற செய்து அதைப் பெருகச் செய்கிறார்.
3. யெகோவா தேவன் நம்முடைய தோல்வி மற்றும் இயலாமையின் மத்தியிலும் நம்மைப் பயன்படுத்துகிறார்.
4. எப்படி நாம் ஆவிக்கரிய வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்தாலும் நாம் இடரி விழுவதற்கு ஏராளமான வழிகளுள்ளது. ஆகவே, நாம் எப்பொழுதும் யெகோவா தேவன் அழைப்பைப் பின்பற்ற வேண்டும்.


5. தேவாகம மேற்கோள்கள்
நியாயாதிபதிகள் 6-8; எபிரேயர் 11:32

6. தியானித்து உரையாடல் கேள்விகள்.
6.1. ஏன் கிதியோனுக்கு விசுவாச வீரர்கள் மத்தியில் ஓர் இடம் கொடுக்கப்பட்டுள்ளது?
6.2. கிதியோனின் பெலவீனங்கள் யாவை?
6.3. கிதியோனின் வாழ்க்கையிலிருந்து நீ கற்றுக் கொண்ட பாடங்கள் யாவை?

ஆபகூக் தீர்க்கதரிசி.

கரு வசனம்
2 கர்த்தாவே, நீர் வெளிப்படுத்தினதை நான் கேட்டேன், எனக்குப் பயமுண்டாயிற்று; கர்த்தாவே, வருஷங்களின் நடுவிலே உம்முடைய கிரியையை உயிர்ப்பியும், வருஷங்களின் நடுவிலே அதை விளங்கப்பண்ணும்; கோபித்தாலும் இரக்கத்தை நினைத்தருளும். (ஆபகூக் 3:2)

கதைச் சுருக்கம்
• ஆபகூக் அநீதியைக் கண்டு சகிக்கக் கூடாதவனாயிருந்தான்.
• ஏன் அநீதிக்காரன் வெற்றிப் பெற்றவனாய் தோன்றுகிறான் என்று கேள்வி கேட்டவன்.
• யெகோவா தேவன் ஆபகூக்கை அக்கேள்விகளுக்குப் பதில்களை எழுதச் சொன்னான்.
• நீதியுள்ள யெகோவா தேவன் மேல் நித்தமும் விசுவாசம் வைக்க வேண்டும்.

1. முன்னுரை – அவனின் கதை
‘ஆபகூக்’ என்பது ‘மல்யுத்த வீரன்’ அல்லது ‘அனைப்பவன்‘ என்ற பொருள்படும். அவனைப் பற்றி பின்னனியோ குணாதிசயங்களோ அவ்வளவோ தெரியவில்லை. ஆபகூக் அசீரியாவைக் குறித்து ஏதும் குறிப்பிடவில்லை. ஆனால், கல்தேயர்களைப் பற்றியும் அவர்களுடைய பெருகுகிற இராணுவ பெலன்களைக் குறித்து குறிப்பிட்டுள்ளான். ஆகவே, அவன் நேபுகாத்நேச்சார் (1:6, 2:3) யூதேயாவை, தாக்கும் நாட்களுக்கு முன்பாக அவன் தீர்க்கதரிசனம் உரைத்தான் என்று தெரிகிறது. அக்காலக் கட்டத்தில் யோயாக்கீம் யூதேயாவை அரசாண்ட காலக்கட்டம் என்று உணரலாம்.

எதற்காக இப்புத்தகம் எழுதப்பட்டது?
இவ்வுலகத்தில் துன்மார்க்கன் ஜெயம் கொண்டவனாய் சாட்சியளித்தாலும் யெகோவா தேவன் இவ்வுலகைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளார் என்று உணர்த்த எழுதப்பட்டுள்ளது. கிமு612 முதல் கிமு 588வரை எழுதப்பட்ட இப்புத்தகம், தென் தேசமான யூதேயாவுக்கும் மற்றும் உலகமெங்கும் உள்ள யெகோவா தேவனுடைய பிள்ளைகளுக்கு எழுதினான். இப்புத்தகத்தின் நோக்கம் பின்னணியில் வளர்ந்து வரும் பாபிலோனிய உலகம் ஆதிக்கமும் அது ஏற்படுத்தப்போகும் அழிவையும் யூதேயா உணர்ந்து தன்னை தற்காத்துக் கொள்ள எத்தனிக்க வேண்டும் என்ற கரிசனைத்தான். ஆபகூக் இப்புத்தகத்தை எழுதினான்.

ஆபகூக் எல்லா கேள்விகளுக்கும் பதில்களைத் தேடினவன். சுற்றிலும் காணப்படும் நிகழ்வுகளைக் கண்டு மிகவும் கடினமாக கேள்விகளைக் கேட்டு விடைகளைத் தேடிக் கொண்டிருந்தான். இவைகள் வெறுமனே அறிவுப்பூர்வமான கேள்விகளோ அல்லது கசப்பான முறையீடோ அல்ல. ஆபகூக் மாண்டுபோகும் உலகத்தைக் கண்டு மணமுடைந்து போனான். ஏன் இவ்வுலகத்தில் இவ்வளவு அநீதி, பொல்லாப்பு என்று கேட்டான். ஏன்? எப்பொழுதும் துன்பமார்க்கன் ஜெயம் கொள்ளுகிறான்?. இக்கேள்விகளை நேராக, யெகோவா தேவனிடமே கேட்டான். யெகோவா தேவனோ சாட்சியோடே பதில்களைத் தந்தார்.

ஆபகூக்கிக் கேள்விகள் ஆபகூக்கின் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.

மல்கியா தீர்க்கதரிசி..

கருவசனம்
1 இதோ, சூளையைப்போல எரிகிற நாள் வரும்; அப்பொழுது அகங்காரிகள் யாவரும் அக்கிரமஞ்செய்கிற யாவரும் துரும்பாயிருப்பார்கள்; வரப்போகிற அந்த நாள் அவர்களைச் சுட்டெரிக்கும்; அது அவர்களுக்கு வேரையும் கொப்பையும் வைக்காமற்போகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 2 ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்; நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள். (மல்கியா 4:1-2)

கதைச் சுருக்கம்
• கடவுள் என்றும் மாறாதவர் என்று உரைத்தான்.
• ஜனங்களின் பாவங்களை உணர்த்தினான் (தசம பாகம்).
• ஜனங்களுக்கு நம்பிக்கையும் பாவ மன்னிப்பையும் குறித்து பிரசங்கித்தான்.
• மனமாறி கடவுளிடம் திரும்புக என்று பிரசங்கித்தான்.

1. முகவுரை – அவன் கதை
‘மல்கியா’ என்றால் ‘என்னுடைய தூதன்’ அல்லது ‘யெகோவாவின் தூதன்’ என்று பொருள்படும் (1:1) ஜேரோம் என்பவர் அவரை எஸ்ரா என்று கூறுகிறார். கி.மு.430 காலக்கட்டத்தில் வாழ்ந்த மற்ற தீர்க்கதரிசிகள் ஆகாய், சகரியா மற்றும் நெகேமியா போன்றவர்களின் காலத்தில் வாழ்ந்தவன். ஆலயம் எழும்பி 100 ஆண்டுகள் ஆகியும் மக்கள் அல்லது ஜனங்கள் யெகொவா தேவனைத் தொழுது கொள்வதில் உற்சாகம் இழந்தும், ஏசயா மற்றும் தீர்க்கதரிசிகளின் மேசியாவின் தீர்க்கத்தரிசனங்களைக் குறித்தும் குழப்பம் அடைந்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள். கி.மு.586ல் எருசலேம் தேவாலயம் அழிக்கப்பட்ட காலத்தில், அநேக ஜனங்கள் யூதேயா தேசத்தில் என்ன என்ன பாவங்களைச் செய்து கொண்டு இருந்தார்களோ அதே பாவங்களை மீண்டும் செய்து கொண்டு வந்தார்கள். மல்கியா ஜனங்களின் பாவங்களையும் போலியான வாழ்க்கை முறைகளையும் கண்டித்து நீதியான யெகோவா தேவனும் கடின இருதயமுள்ள மக்கள் உரையாடுவது போல் பிரசங்கித்தான்.

பின்னணி என்ன?
மல்கியா, ஆகாய், செஜரியா தீர்க்கதரிசிகள் சிறையிருப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட யூதேயா நாட்டு தீர்க்கதரிசிகள் எருசலேம் தேவாலயம் கட்டப்படுவதில் சுணக்கம் ஏற்பட்டதால் ஆகாய் மற்றும் செவறியா தீர்க்கதரிசகள் கண்டித்தனர். ஜனங்ள் ஆலயத்தைக் கவனிக்காமல் விட்டு விட்டதையும் போலியான ஆராதனை மேற்கொண்டதையும் மல்கியா கண்டித்துத் தட்டிக் கேட்டான்.

மல்கியா, மக்களை தாங்கள் செய்த பாவங்களுக்குக் கடவுளிடம் மன்னிப்பைத் தேடச் சொல்லி கண்டித்தான். கடவுளிடம் உண்மையாய் இருப்பது முக்கிய அக்கறையாகும். அவர்கள் கடவுளிடம் உண்மையில்லாதவர் ஆவார்கள். மல்கியாவிடம் ஒரு சிறந்த எதிர்காலம் இருந்த்து.

(எகா.) மல்.3:7-8, கடவுள் கூறினார், என்னுடன் திரும்பு; நான் உன்னுடன் திரும்புகிறேன் என்று யெகோவா தேவன் கூறுகிறார். ஆனால், ‘எப்படி நாங்கள் திரும்புவோம்?‘ என்று மக்கள் கேட்கின்றனர்,.

அவரின் போதனை
கடவுளின் அன்பு ஒழுக்கமானது மற்றும் முழுமையானது. யெகோவா தேவனின் அன்பு செயல்பாடும் அன்பு மற்றும் பாதுகாப்பும் ஆகும். அவர் உண்மையானவர். அவர் உண்மையாக மக்களுக்கு சத்தியம் செய்பவர். ஜனங்கள் அன்பான யெகோவா தேவனை பெருமை நிமித்தம் ஏற்றுக் கொள்ளாமல் உடன் படுக்கையை மீறி அந்நிய தெய்வங்களைப் பின்பற்றி தங்கள் சுயநலத்திற்காக வாழ்ந்தார்கள். அதனால் அவர்களின் தொடர்பு முறிந்து போனது.

ஆனால், இந்த மீறுதல்கள் மாற்றப்படக் கூடியவை. எல்லா நம்பிக்கைகளும் வீண் போகவில்லை. யெகோவா தேவன் சுகமாக்கி மறுபடியும் கட்டுகிறார். மன்னிப்பு அளிக்கிறார். அதுதான் கிருபை. இதுதான் மல்கியாவின் போதனை. இப்போதனை தூதர்களை நினைவுப்படுத்தியது. தூதர்கள் கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட ஜனங்கள். தூதர்களுடைய மனப்பூர்வமான கீழ்ப்படியாமை, அவர்களின் ஆசாரியர்களிடம் (1.1-2:9) தொடங்கி மற்ற மற்ற யூதர்களிடம் பரவிற்று (2:10-3:15). அவர்கள் கடவுளின் நாமத்தை அவமதித்தார்கள் (1:6)அவர்கள் போலியான ஆராதனைகளை மேற்கொண்டனர் (1:7-14). கடவுளின் காணிக்கைகளைத் தங்களுக்கு என்று வைத்துக் கொண்டனர் (3:8-12). அவர்கள் அகங்காரங்கமாய் நடந்து கொண்டார்கள் (3:13-15). யெகோவா தேவனுக்கும் அவர்களுக்கும் இடையே உள்ள உறவு முறிந்து தண்டிக்கப்படத் தக்கவர்கள் ஆனார்கள். இருப்பினும் துன்மார்கர் மத்தியில் ஒரு சிலர் நேர்மையாகவும் உண்மையாகவும் யெகோவா தேவனை நேசித்து கனம் படுத்தி வாழ்ந்து வந்தனர். இப்படிப்பட்டவர் மேல் யெகோவா தேவன் ஆசீர்வாத்த்தை ஆண்கள் மீதும் பெண்கள் மீதும் பொலிந்தருளினார் (3:16-18).

மல்கியா, இஸ்ரவேலர்களின் பின்வாங்கிப் போகும் தன்மையை அழகாக சித்தரித்திருக்கிறார். இஸ்ரவேலர்கள் தங்களின் பாவத்தின் நிமித்தம் தண்டிக்கப்படத் தக்கவர்கள். இருப்பினும் மல்கியாவின் போதனை நம்பிக்கையை ஊட்டுகிறது. எல்லோருக்கும் மன்னிப்பு உண்டு. மல்கியா 4:2ல், ‘ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும். அதின் செட்டைகளின் கீழ் ஆரோக்கியம் இருக்கும், நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள்‘.

மல்கியா தன்னுடைய புஸ்தகத்தை இவ்வாறு முடிக்கிறான். எலிசா தீர்க்கதரிசி வருகிறான் என்று முடிக்கிறான். அவர் வந்து யெகோவா விசுவாசிக்கிற எல்லா ஜனங்களுக்கும் அளிக்கிறார் (4:5-6)

மல்கியா தீர்க்கதரிசி புஸ்தகம் பழைய ஏற்பாட்டிற்கும் புதிய ஏற்பாட்டிற்கம் ஒரு பாலமாக அமைகிறது.


2. மல்கியாவின் முக்கியக் குறிப்புகள்
மல்கியா, கிமு.450ல் ஜீடாவில் துர்க்கதரிசியாக இருந்தான். அவன் ஒரு கடைசி பழைய ஏற்பாட்டிற்கான..

அ) காலக்கட்த்தின் சூழ்நிலை: எருசலேம் நகரம் எழுப்பியும் மற்றும் புதிய ஆலயம் எழுப்பியும் 100 ஆண்டுகள் ஆனது. ஆனால் மக்கள் கடவுளின் மீது நிர்பிசாரம் கொண்டுள்ளனர்.

ஆ) தலைமை கருத்து
ஜனங்கள் செய்த பாவங்களினால் அவர்களுக்கும் கடவுளுக்கும் இடையே உள்ள தொடர்பு முறிவுபட்டது. மற்றும் அவர்கள் விரைவில் தண்டிக்கப்படுவார்கள். ஆனால், யாரொருவர் மனம் திருந்தினால் அவர்கள் கடவுளின் ஆசீர்வாத்த்தைப் பெறுவர். அவர் வாக்குத்தத்தத்தில் மேசியாவை அனுப்புவதாக ஆணித்தரமாக கூறியுள்ளார்.

இ) கதையின் முக்கியத்துவம்
மாயஜாலம், கடவுள் மேல் அக்கரையின்மை மற்றும் ஏனோதானோ என்று வாழும் வாழ்க்கை மிக பயங்கரமான பின் விழைவை விளைவிக்கும். கடவுளை சேவிப்பது தொழுது கொள்வதும் அன்றி வேறொன்றும் இன்மையிலும் மறுமையிலும் முக்கிய குறிக்கோளாக இருக்க்க் கூடாது.

சமகால தீர்க்கதரிசிகள் – கிடையாது


3. பெரிய தலையங்கம்
தலையங்கம் விளக்கம் / முக்கியத்துவம்

அ) கடவுளின் அன்பு
கடவுள் தன் ஜனங்களை நேசிக்கிறார் – யெகோவா தேவனைக் கண்டு கொள்ளவில்லை என்றாலோ, கீழ்ப்படியவில்லை என்றாலும் நிச்சயம் யெகோவா தேவன் அவர்களை நேசிப்பார். யெகோவ தேவனக்கு உத்தம்மான உண்மையாய் இருப்பவர்களுக்கு அளவில்லாத ஆசீர்வாதங்களை அளிக்க்க் காத்துக கொண்டிருக்கிறார். யெகோவா தேவனின் அன்புக்கு எல்லை கிடையாது.

ஆ) கடவுள் அளவற்ற பிரியம் வைத்திருப்பது நிமித்தம் போலி வாழ்க்கையும், அக்கறையில்லாத வாழ்க்கையும் வெறுக்கிறார். இப்படிப்பட்ட வாழ்க்கை அவரோடு உறவாடுவதைத் தடை செய்கிறது. நாம் எதைக் கடவுளுக்கு எவ்வாறு கொடுக்கிறோமோ அது நம்முடைய மெய்யான அன்பின் அளவைக் குறிக்கிறதாய் இருக்கிறது.

இ) ஆசாரியர்களின் பாவங்கள்
மல்கியா ஆசாரியர்களைக் குற்றம் சாட்டுகிறான். யெகோவா தேவனின் தேவைகளை அவர்கள் அறிவர். அவர்களின் தியாகங்கள் பலியானது மற்றும் நேர்மையற்றது. யெகோவா தேவனை ஆராதிக்கும் போது ஒரு சிந்தை இல்லாமல் ஆராதித்தல்.
யெகோவா தேவன் நம்முடைய மதிப்பிற்கம் மரியாதைக்கும் உரிய தேவனாக இருக்கிறார். பெருமை நிமித்தம் கடவுளிடம் கொடுக்க வேண்டிய ஆராதனை, கல்யான வைபவங்கள், பணம், குடும்பம் ஆகியவை கொடுக்காமல் இருக்க்க் கூடாது.

இ) கடவுளின் வருகை
விசுவாசமுள்ள மக்களைக் கடவுள் நேசித்து, அந்நேசத்தின் நிமித்தம் மேசியாவாக இப்பூலோகத்திற்கு வருகிறார். அம்மேசியா ஜனங்களை வழி நடத்தி நம்பிக்கையூட்டுகின்றன. அந்த நாள் ஜனங்களுக்குச் சுகத்தையும் சௌபாக்கியத்தையும் கொடுக்கின்றன. நாளாக இருக்கும். ஆனால் அவரைத் தள்ளிவிடும் ஜனங்களுக்கு நியாயத்தீர்ப்பு நாளாக விளங்கும்.

கிறிஸிதுவின் முதல் வருகை அவரை விசுவாசிக்கிற யாவரையும் பரிசுத்தப்படுத்தும் பக்குப்படுத்தும்.


4. வேதாகமக் குறிப்பு:


5. கலந்துரையாடுவதற்காக்க் கேள்விகள்
1. மல்கியாவின் பொருள் என்ன?
2. எப்பொழுது பரிமாரினார்?
3. கடவுளின் அன்பைப் பற்றி என்ன கூறினான்?
4. என்ன பாவங்கள் ஆசாரியர்கள் செய்தனர்?
5. மேசியாவின் பாத்திரம் என்ன?

ஆக்கில்லா, பிரிஸ்கில்லா தம்பதியினர்

ஆக்கில்லா, பிரிஸ்கில்லா கணவன் மனைவி
பவுலின் மிஷனரி ஊழியத்தில் பங்காளர்கள்.

கரு வசனம்
3. கிறிஸ்து இயேசுவுக்குள் என் உடன் வேலையாட்களாகிய பிரிஸ்கில்லாளையும் ஆக்கில்லாவையும் வாழ்த்துங்கள்.
4. அவர்கள் என் பிராணனுக்காகத் தங்கள் கழுத்தைக் கொடுத்தவர்கள்;: அவர்களைப்பற்றி நான் மாத்திரமல்ல, புறஜாதியாரில் உண்டான சபையாரெல்லாரும் நன்றியறிதலுள்ளவர்களா யிருக்கிறார்கள். ரோமர் 16:3-4

சுருக்கத்திரட்டு
• ஆக்கில்லா, பிரிஸ்கில்லா ஆகிய இருவரும் பவுலின் மிஷனரி ஊழியத்தில் பங்காளர்கள்.
• இவர்கள் மற்றவர்களுக்கு பாரமாய் இராதபடிக்கு கூடாரம் பண்ணுகிற தெரிழில் செய்து அவர்களது பணத் தேவைகளைச் சந்தித்துக் கொண்டனர்.
• இவர்கள் தங்கள் உயிரையும் பணயம் வைத்தனர் என பவுல் கூறுகிறார்.

1. அறிமுக உரை - அவர்களது கதை
சில தம்பதியினர்களுக்கு வாழ்க்கையை எப்படி வாழ்வது என்று தெரியும். அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து, விட்டுக்கொடுக்காது, ஒருவரின் பெலத்தை மற்றவர் மூலதனமாய் வைத்து ஒரு திறமையான அணியை வடிவமைத்துக் கொள்கின்றனர். இப்படிப்பட்ட இருவரின் இணைப்பு சுற்றி இருந்தவர்களைப் பிரம்மிக்கச் செய்யும். ஆக்கில்லா மற்றும் பிரிஸ்கில்லா ஆகிய இவர்களும் இப்படிப்பட்ட ஒரு தம்பதியினராக காணப்பட்டனர். இவர்களை வேதம் ஒருபோதும் தனித்தனியாக பிரித்து கூறவே இல்லை. இவர்கள் குடும்ப வாழ்விலும் சரி ஊழியத்திலும் சரி இணைந்தே செயல்பட்டனர்.


பவுல் கொரிந்துவிற்கு மேற்கொண்ட இரண்டாவது மிஷனரி பயணத்தின்போது ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் அவரை அங்கே சந்தித்தனர். யூதருக்கு எதிராக கிளாடியஸ் என்ற மன்னனின் தீர்ப்பின்படி இவர்கள் ரோமாபுரியை விட்டு வெளியேற்றப்பட்டனர். இவர்களது வீடானது கூடாரத்தைப்போல அவர்களாலேயே அவ்வப்போது இடமாற்றக்கூடிய விதத்தில் அமைக்கப்பட்டு இருந்தது. இவர்கள் தங்களது இல்லத்தைப் பவுலுக்குத் திறந்து கொடுத்தனர். பவுலும் இவர்களோடு கூடாரம் செய்யும் தெரிழிலில் இணைந்து கொண்டார். பவுல் ஆக்கில்லா, பிரிஸ்கில்லா ஆகிய இவர்களோடு அவருக்கிருந்த ஆவிக்குரிய ஞானத்தின் ஐஸ்வர்யத்தை பகிர்ந்து கொண்டார்.

ஆக்கில்லா, பிரிஸ்கில்லா ஆகிய இருவரும் இந்த சந்தர்பத்தை நன்கு பயன்படுத்தி தங்களது ஆன்மீக கல்வியில் கவனம் செலுத்தினர். இவர்கள் பவுலது போதனைகளைக் கவனமாக கேட்டு, தாங்கள் கேட்டவற்றைத் தியானித்தனர். இவர்கள் அப்பொல்லோவினுடைய பேச்சினை கேட்டபோது அவனுடைய திறமைகளால்; ஈர்க்கப்பட்டனர். ஆனால் இவனது தகவல்கள் முழுமை பெறவில்லை என்று இவர்கள் புரிந்து கொண்டனர். இவர்கள் இவனிடத்தில் அங்கேயே நேருக்கு நேர் எதிர்த்து நிற்காமல் அமைதியாக அவனைத் தங்களது இல்லத்திற்கு அழைத்துச் சென்று அவன் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை அவனுடன் பகிர்ந்து கொண்டனர். அதுவரை கிறிஸ்துவைப் பற்றின செய்தியை அப்பொல்லோ யோவான்ஸ் நானகனின் மூலமே கேட்டிருந்தான். ஆக்கில்லா, பிரிஸ்கில்லா ஆகிய இருவரும் இயேசுவினுடைய வாழ்க்கை, அவரது மரணம், அவரது உயிர்தெழுதல் மற்றும் தேவன் பரிசுத்த ஆவியாக நம்மோடு உண்மையாக ஜீவிக்கிறார் என்பதையும் இவனுக்கு தெரிவித்தனர். இப்பொழுதோ முழு விவரமும் தெரிந்தவனாக இவன் மிகுந்த சக்தியோடு தெரிடர்ந்து பிரசங்கித்தான்.

ஆக்கில்லா, பிரிஸ்கில்லா ஆகிய இருவரும் தங்களது இல்லத்தை ஓர் அன்புள்ள பயிற்சி மையமாகவும், ஆராதனை ஸ்தலமாகவும் பயன்படுத்தி வந்தனர். பல வருடங்களுக்குப் பின் ரோமாபுரிக்குத் திரும்பி அவர்களால் முன்னேற்ற மடைந்த ஓர் ஆலயமாக்கப்பட்ட வீட்டில் தங்கியிருந்தனர். அப்பொல்லோவைப் போல, இந்த பிரிஸ்கில்லாளும் எபிரேயர் நிருபத்தை எழுதியிருக்க வாய்ப்புள்ளது.

ஒரு காலக் கட்டத்தில் அநேகரது கவனம் கணவன் மனைவி ஆகிய இவர்கள் இருவருக்கிடையே என்ன நடக்கிறது என்பதில் தான் இருந்தது. ஆனால் இந்த ஆக்கில்லா, பிரிஸ்கில்லா ஆகிய இவர்கள், கணவன் மனைவி ஆகியவர்கள் மூலமாக என்ன நடக்க முடியும் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாக திகழ்ந்தனர். இவர்களது திறமையானது இவர்கள் இருவருக்கும் இடையே இருந்த உறவின் நெருக்கத்தையும் காண்பிக்கிறது. அவர்களின் விருந்தோம்பல் பண்பானது அநேகரை இரட்சிப்புக்குள்ளாக வழி நடத்த ஒரு பெரிய வழி வாசலைத் திறந்தது. கிறிஸ்தவர்களது இல்லமானது சுவிசேஷத்தைப் பரப்பும் ஒரு சிறந்த கருவியாக இன்றும் காணப்படுகிறது. நமது கேள்வி என்னவென்றால் நமது இல்லமானது நம் வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு கிறிஸ்துவைக் கண்டுகொள்ளக் கூடிய இடமாக அமைந்துள்ளதா என்பதுதான்?

2. வல்லமையும் சாதனையும்
2:1 தலைசிறந்த தம்பதியினராக ஆரம்ப கால சபைகளில் தேவனுக்கு ஊழியம் செய்தனர்.
2:2 கூடாரம் செய்து அவர்களது அன்றாட தேவைகளை அவர்களாகவே சந்தித்துக் கொண்டனர்.
2:3 இவர்கள் பவுலின் நெருங்கிய நண்பர்களாக காணப்பட்டனர்.
2:4 கிறிஸ்துவின் முழு செய்தியையும் அப்பொல்லோவிற்கு விவரமாக தெரிpவித்தனர்.

3. அவர்களது வாழ்க்கையிலிருந்து பாடங்கள்
3:1 தம்பதியினர் இணைந்து ஒரு பயனுள்ள ஊழியத்தைச் செய்ய முடியும்.
3:2 நமது இல்லமானது சுவிசேஷத்திற்கு விலையுயர்ந்த கருவியாகும்.
3:3 தேவ சபையில் என்ன பொறுப்பு வகித்தாலும் சரி, ஒவ்வொரு விசுவாசியும் கடவுளைப் பற்றின நம்பிக்கையில் நன்கு கற்பிக்கப்படவேண்டும்.

4. வேதாகமக் குறிப்புகள்
அவர்களது கதையானது அப்போஸ்தலா; 18லும், ரோமர் 16:3-5, 1 கொரிந்தியர் 16:19, 2 தீமோத்தேயு 4:19 ஆகிய பகுதிகளிலும் குறிப்பிடப் பட்டுள்ளது.

5. கலந்தாலோசனைக்கான கேள்விகள்
5:1 ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாவும் தங்களது பணத்தேவைகளை எப்படி சந்தித்துக் கொண்டனர்?
5:2 அவர்களது இல்லத்தை தேவனுடைய ஊழிய வேலைகளுக்கு எப்படி பயன்படுத்தினார்கள்?
5:3 அப்பொல்லோ மேலும் கிறிஸ்தவனாக வளருவதற்கு இவர்களிருவரும் எப்படி உதவினார்கள்?

காய்பா..

பிரதான ஆசாரியன் - இயேசுவின் மரணத்திற்கு பொறுப்பானவன்

கரு வசனம்
49. அப்பொழுது அவர்களில் ஒருவனும் அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனுமாகிய காய்பா என்பவன் அவர்களை நோக்கி: உங்களுக்கு ஒன்றுந் தெரியாது:
50. ஜனங்களெல்லாரும் கெட்டுப்போகாதபடிக்கு ஒரே மனுஷன் ஜனங்களுக்காக மரிப்பது நமக்கு நலமாயிருக்குமென்று நீங்கள் சிந்தியாமலிருக்கிறீர்கள் என்றான். யோவான் 11:49-50

கதைச் சுருக்கம்
• இயேசுவின் ஊழிய நாட்களில் இருந்த பிரதான ஆசாரியன்.
• யூத அரசின் அதிகார தலைவனாகவும், சங்கத் தலைவனாகவும் காணப்பட்டான்.
• ரோம ஆளுநருக்குப் பின் யூதேயாவில் சக்திவாய்ந்த நபராக காணப்பட்டான்.
• இவன் இயேசுவின் மரணம், அதனால் உண்டாகும் பரிகாரம் குறித்து தன்னையும் அறியாமல் தீர்க்கதரிசனமாக கூறினான்.
• இவன் வழக்கத்திற்கு மாறாக நீண்ட காலம் பணியிலிருந்தான். ஒரு குறிப்பிடத்தக்க அரசியல் திறனும் கொண்டிருந்தான்.

அறிமுகம் - அவனது கதை
காய்பாவினுடைய சேவை காலமானது கி.பி 18-36 என ஜோசப் கூறுகிறார். இவன் விட்டாலியஸ் என்ற சீரியா ஆளுநரால் பதவி இறக்கப்பட்டவன்.
இந்த காய்பா என்பவன் சாதுசிஸ் (Sadducees) என்ற ஒரு மதம் சார்ந்த குழுவிற்கு தலைவனாகவும் நன்கு கற்றவனாயும், செல்வம் நிறைந்தவனாயும் காணப்பட்டான். அரசியல் செல்வாக்கு மிகுந்தவனாயும் தேசத்தில் காணப்பட்டான். இந்த சிறந்த குழுவானது ரோமபுரியினரோடு ஒரு நல்ல உறவு கொண்டிருந்தது. இவர்களது வாழ்வு முறைக்கு ஆபத்து வந்துவிடுமென எண்ணி இவர்கள் இயேசுவை வெறுத்தனர். இயேசு கூறின செய்தியினை அவர்களால் ஏற்க முடியவில்லை. இராஜ்யத்திலே இருக்கின்ற தலைவர்கள் எந்த முறையீடுமின்றி காணப்பட்டனர்.

காய்பாவின் வழக்கமான கொள்கை என்னவென்றால் தன்னுடைய பதவிக்கோ அல்லது அந்தஸ்துக்கோ இடையூறு வருமென்றால் அதை எப்படியாயினும் நீக்கிவிடுபவனாக காணப்பட்டான். இயேசு மரிக்க வேண்டும் என்பது அவனது கேள்வி அல்ல, அவருடைய மரணம் எந்த நேரத்தில் நடக்க வேண்டும் என்பது தான். இயேசுவானவர் பிடிக்கப்பட்டு நீண்ட அனுபவத்திற்குள்ளாவது மட்டுமல்லாது இந்த யூத மன்றமானது ஒருவருக்கு மரண தண்டனை வழங்க வேண்டுமானால் ரோமர்களின் அனுமதியை பெற வேண்டியதாயிருந்தது. காய்பாவின் திட்டத்திற்கு எதிர்பாராத விதமாக யூதாஸ் கிறிஸ்துவைக் காட்டிக் கொடுத்து இவனுக்கு உதவினான். காய்பாவினுடைய எண்ணம் எல்லாம் தேவனின் அற்புதமான திட்டங்களின் நிறைவேறுதல் என்று காய்பாவால் அறிந்து கொள்ள முடியவில்லை. இவனுடைய சொந்த பாதுகாப்பிற்காக வேறு ஒருவரின் வாழ்க்கையைத் தியாகம் செய்ய வைக்கிறான். இதிலிருந்து இவனது சுய நலம் தெளிவாகத் தெரிகிறது. இதற்கு மாறாக இயேசு தமாக முன் வந்து தனது வாழ்க்கையை நமக்காக ஜீவ பலியாக ஒப்புக் கொடுத்தார் என்பது தேவன் நம்மேல் வைத்த அன்பிற்கு அடையாளமாகும். இயேசுவை சிலுவையில் தொங்கவைத்து மரிக்கச் செய்ததனால் தான் ஜெயித்து விட்டதாக காய்பா எண்ணினான். ஆனால் இயேசுவின் உயிர்த்தெழுதலையோ அவன் எண்ணவில்லை.

காய்பாவினுடைய மனதின் எண்ணங்கள் முற்றிலுமாக அடைக்கப் பட்டிருந்தது. அநேக சாட்சிகள் இருந்தபோதிலும் இவனால் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை ஏற்க முடியவில்லை. எவர்களுடைய வாழ்க்கை முற்றிலுமாய் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவினால் மாற்றப்பட்டிருந்ததோ அவர்கள் எல்லோரையும் அமைதி படுத்த முயற்சித்தான் (மத்தேயு 28:12-13). கிறிஸ்துவை விசுவாசியாதவர்களைப் பிரதிநிதித்தான் காய்பா. காரணம், இயேசுவை தேவன் என ஏற்றுக்கொண்டால் அது அவர்களை அதிகமாக பாதிக்கும் என்று எண்ணினான். தேவனுடைய குமாரனை ஏற்றுக்கொள்ளுகிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு என்கின்ற கடவுளுடைய வார்த்தையை விட இவர்கள் தங்களுடைய அதிகாரம் செல்வாக்கு மற்றும் இன்பம் நிறைந்த இந்த உலக வாழ்க்கையைத் தெரிந்து கொண்டனர். உங்களுடைய தேர்வு என்ன?

2. வல்லமையும் சாதனைகளும்
18 ஆண்டுகள் பிரதான ஆசாரியனாக பணியாற்றினவன். தனக்கே தெரியாமல் தீர்க்கதரிசியாக காணப்பட்டான்.

3. பெலவீனமும் குறைவுகளும்
3.1 இயேசுவின் மரணத்தில் நேரடியாக சம்பந்தப்பட்டவன்.
3.2 அவனது அதிகாரம் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்புக்கு அவனது அலுவலகத்தை வழியாக
பயன்படுத்திக்கொண்டான்.
3.3 இயேசுவை பிடிக்க வகைதேடினவனும், சட்ட விரோத சோதனை மேற்கொண்டவனும், இயேசுவை சிலுவையில் அறையும்படி அங்கீகரிக்க பிலாத்துவை நிர்பந்தித்தவனும், இயேசுவின் உயர்த்தெழுதலை தடுக்க முயற்சித்தவனும், பின்னர் இயேசு உயிர்த்தெழுந்தார் என்ற உண்மையை மறைக்க முயற்சி செய்தவனுமாக காணப்பட்டான்.
3.4 மத தோற்றப் பொலிவை வைத்து ரோமரோடு சமரசம் செய்தவன்.
3.5 கிறிஸ்தவர்களைக் கொடுமை படுத்துவதில் பிற்காலங்களில் சம்பந்தப்பட்டவன்.


4. இவனது வாழ்க்கையிலிருந்து பாடங்கள்
4.1 தேவன் எதிரிகளின் மாறுபாடான நோக்கங்கள் மற்றும் செயல்களைக் கொண்டும் தமது சித்தத்தை நிறைவேற்றுவார்.
4.2 சுயநல நோக்கங்களை நாம் ஆவிக்குரிய கருத்தோடும் தேவ வார்த்தைகளாலும் மூட முயற்சிப்போமானாலும், தேவன் நமது உள்ளத்தின் எண்ணத்தை அறிந்தே இருக்கிறார்.

5. வேதாகமக் குறிப்புக்கள்
மத்தேயு 28:12-13; யோவான் 11:49-50 மற்றும் அப்போஸ்தலர் நடபடிகள் 4:6லும் இவனை குறித்து வாசிக்கலாம்.

6. கலந்தாலோசனைக்கான கேள்விகள்
6.1 இவன் எத்தனை ஆண்டுகள் பிரதான ஆசாரியனாக பணியாற்றினான்?
6.2 இவனை பதவி இறக்கியவன் யார்?
6.3 இயேசுவை சிலுவையில் அறைய யூதாஸ் எங்ஙனம் உதவினான்?
6.4 இயேசுவின் இறப்பு ஒரு பாக்கியம் என இவன் கருதினது ஏன்?
6.5 ஏன் இவனும் இவனைச் சார்ந்த மற்றவர்களும் இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை?

லாபான்

பெத்துவேலின் குமாரன், ரெபெக்காளின் சகோதரன்.


முக்கிய வசனம்:
"என் பிதாவின் தேவனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் பயபக்திக்குரியவரும் என்னோடிராமற்போனால, நீர் இப்பொழுது என்னை வெறுமையாய் அனுப்பிவிட்டிருப்பீர்; தேவன் என் சிறுமையையும் என் கைப்பிரயாசத்தையும் பார்த்து, நேற்று ராத்திரி உம்மைக் கடிந்து கொண்டார் என்று சொன்னான்." (ஆதியாகமம் 31:42)


சுருக்கமான கதை:
• லாபான் பெத்துவேலின் குமாரன், யாக்கோபுக்கும் ஈசாவுக்கும் மாமன். (ஆதியாகமம் 24:29)
• ரெபெக்காளும் ஈசாக்கும் திருமணம் புரிய லாபான் அனுமதி அளித்தான்.
• யாக்கோபுக்கு ராகேலின்மேல் இருந்த மிகுந்த ஆசையைப் பயன்படுத்தி, அவன் தனக்கு 14 வருடங்கள் ஊழியம் செய்ய லாபான் சூழ்ச்சி செய்தான்.
• லாபான் தன் ஏமாற்றப்பட்டதை அறிந்தான். (ஆதியாகமம் 26)
• அவன் யாக்கோபுடன் ஓர் உடன்படிக்கை செய்ய வேண்டியதின் அவசியத்தை அறிந்தான்.( ஆதியாகமம் 31)
• யாக்கோபு வெற்றி பெற்றது தன்னுடைய தந்திரத்தால் அல்ல, ஆண்டவருடைய உடன்படிக்கையின் கிருபையால்.


1. முன்னுரை– லபானுடைய கதை:
எபிரேய மொழியில் லாபான் என்ற பெயருக்கு "வெண்மை" என்று பொருள். நாம் எல்லோரும் சில நேரங்களில் சுய நலவாதிகள்தான். ஆனால் சிலர் இந்த பலவீனத்துக்கு அடிமைகள். லாபானின் வாழ்நாள் முழுவதும் சுய நலத்தால் முத்திரை குத்தப்பட்டது. அவனது முதன்மையான நோக்கமே தன்னைத்தான் கவனித்துக்கொள்ளுவதுதான். அவன் மற்றவர்களை எவ்வாறு நடத்தினான் என்பது இந்த நோக்கத்தால்தான் கட்டுப்படுத்தப்பட்டது. தன் சகோதரி ரெபெக்காளுக்கும் ஈசாக்குக்கும் நடந்த திருமணத்தின் மூலம் தனக்கு லாபகரமான ஏற்பாடுகளைச் செய்து கொண்டான்; தன் குமாரத்திகளின் வாழ்க்கையை பேரம் பேசும் சில்லுகளாக பயன்படுத்தினான். இறுதியில் யாக்கோபு லாபானைத் தோற்கடித்தான். ஆனால், வயதில் பெரியவனான லாபான் இந்தத் தோல்வியை ஒப்புக்கொள்ள விரும்பவில்லை. யாக்கோபின் மேல் அவனுக்கு இருந்த பிடி உடைந்து போனாலும், அந்த இடத்தைவிட்டு நிரந்தரமாகப் போய்விடுகிறேன் என்று யாக்கோபை உறுதிமொழி செய்யச் சொன்னதன் மூலம், லாபான் யாக்கோபை ஓரளவாவது கட்டுப்பாடு செய்ய முயன்றான். யாக்கோபையும், யாக்கோபின் ஆண்டவரையும் தன்னால் சமாளிக்க முடியாது என்பதை உணர்ந்தான்.

மேலோட்டமாகப் பார்க்கும்போது நாம் லாபானுடன் அடையாளப் படுத்திக்கொள்வது கடினமான போதிலும், அவனுடைய சுயனலம்தான் நமக்கும் அவனுக்கும் இருக்கும் ஒரு பொதுவான காரியம். அவனைப் போலவே, மற்றவர்களையும், நிகழ்வுகளையும் நம்முடைய சுய லாபத்துக்காகக் கட்டுப்படுத்தும் மனப்போக்கு பல நேரங்களில் நமக்கும் இருக்கும். மற்றவர்களை நடத்தும் விதத்துக்கு நாம் சொல்லும் "நல்ல" காரணங்கள், நம்முடைய சுயனலமான நோக்கத்தை மறைக்க நாம் போடும் மிக மெல்லிய போர்வையாகும். நம்முடைய சுயனலத்தை நம்மாலேயே கண்டுபிடிக்க முடியாது. அதைக் கண்டு பிடிக்க ஒரு வழி, நம்முடைய தவறை ஒப்புக்கொள்ள நாம் தயாராக இருக்கிறோமா என்று ஆராய்வதுதான். லாபானால் இதைச் செய்ய முடியவில்லை. நீங்கள் சொல்லியதைக் குறித்து நீங்களே ஆச்சரியப்பட்டு, உங்களுடைய தவறான நடவடிக்கையை ஒப்புக்கொள்ளத் தவறும்போது, உங்களுடைய சுய நலத்தின் காட்சியைக் காணலாம். சுயனலத்தை அடையாளம் கண்டு கொள்ளுவது ஒரு வேதனை தரும் காரியம், ஆனால் அதுதான் ஆண்டவரை நோக்கி நாம் செல்லும் பாதையில் நம்முடைய முதல் அடியாகும்.


2. லாபானுடைய பலமும், சாதனைகளும்:
அ) ஆபிரகாமின் குடும்பத்தில் இரண்டு சந்ததியாரின் திருமணங்களைக் கட்டுப்படுத்தினான். ( ரெபெக்காள், ராகேல் மற்றும் லேயாள்).
ஆ) மிகவும் கூர்மையான அறிவுடையவன்.


3. பலவீனங்களூம் தவறுகளும்:
அ) தன்னுடைய சுய லாபத்துக்காக மற்றவர்களை கட்டுப்படுத்தினான்.
ஆ) தன் தவறுகளை ஒப்புக்கொள்ள மனதில்லாதிருந்தான்.
இ) யாக்கோபை உபயோகப்படுத்தி உலகத்துக்குரிய பணத்தில் பயனடைந்தான் ஆனால் யாக்கோபின் தேவனை அறிந்து வழிபட்டதன் மூலம் ஆவிக்குரிய வாழ்க்கையில் பயன் அடையவில்லை.


4. அவனுடைய வாழ்க்கையிலிருந்து பாடங்கள்:
அ) மற்றவர்களை உபயோகப்படுத்துபவர்கள் கடைசியில் தாங்களே மற்றவர்களால் உபயோகப்படுத்தப்படுவதைக் காண்பார்கள்.
ஆ) ஆண்டவருடைய திட்டத்தை யாராலும் தடுக்க முடியாது.


5. வேத ஆதாரங்கள்:
லாபானுடைய கதை ஆதியாகமம் 24:1–31:55 வசனங்களில் கூறப்பட்டுள்ளது.


6. விவாதத்துக்குரிய கேள்விகள்:
6.1. லாபானுக்கும் ஆபிரகாமுக்கும் இருந்த உறவு என்ன?
6.2. யாக்கோபு தன்னுடைய சகோதரனையே ஏமாற்றினான். அவனை லாபான் எவ்வாறு ஏமாற்றினான்?
6.3. லாபானுடைய பிடியிலிருந்து யாக்கோபு எப்படி தப்பினான்?
6.4. அவனுடைய பலவீனங்கள் என்ன?
6.5. அவனுடைய வாழ்க்கையிலிருந்து நாம் கற்கும் பாடங்கள் என்ன?


மொழி பெயர்ப்பு:
திருமதி. கிரேஸ் ஜட்சன்,
பரி. பவுல் ஆலயம், பெட்டாலிங் ஜெயா.

பாலியலின் வல்லமை

புது மாப்பிள்ளை சகோ.கோல்வின் பாலியல் குறித்து சரியாகப் புரிந்து கொள்ளவேண்டும் என்று தான் கற்றுக் கொண்டதை அனைவரும் அறிய இங்கு தந்திருக்கிறார். மிகவும் நடைமுறை மொழியில் எழுதப்பட்டிருக்கிறது.

பாலியல் உணர்வுகளை மேற்கொள்ள முடியாமல் பல கிறிஸ்தவர்களும் அதனுடன் போராடிக் கொண்டு இருக்கின்றனர். சிலர் பாவத்தில் விழுந்தும் விடுகின்றனர். பாலியல் உணர்வுகள் குறித்த என் கருத்துக்களையும் இங்கு பதிக்கிறேன்.

1.அனேகர் பாலியல் உணர்வுகள் எழும்புவதே பாவம் என்று நினைக்கின்றனர். இது தவறு. நமக்கு பசி உணர்வு இருப்பது போலவே, பாலியக் உணர்வும். நாம் பசிக்கிறது என்பதற்காக கண்டதையும் சாப்பிடுவதில்லை. அதே போலவே பாலியல் உணர்வையும் அணுகவேண்டும். (எபிரேயர் 13:4).

2. வேறு சிலர் பாலியல் உணர்வையும், பாலியல் இச்சையையும் போட்டுக் குழப்பிக் கொள்ளுகிறார்கள். இன்றைய காட்சி ஊடகங்களின் வலிமையான தாக்குதலினால் தவறான விதையே பெரும்பாலும் விதைக்கப்படுகிறது.

3. நாம் பலுகிப் பெருக வேண்டும் என்பதற்காகவும், கணவனும் மனைவியும் ஒரே சரீரம் என்பதை உணரவும் பாலியல் உணர்வு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆதாமும் ஏவாளும் பாவம் செய்வதற்கு முன்பே தேவன் அவர்கள் பலுகிப் பெருகுங்கள் என்று கட்டளை கொடுத்திருந்தார்.

4. ஒரு பெண்ணை இச்சையோடே பார்ப்பதே (பாலியல்) பாவம் என்று இயேசு சொன்னார். ஆகவே பாலியல் இச்சையை மேற்கொள்ள ஒரே வழி- அதற்கு விலகி ஓடுவதே. இதுவே வேதம் தரும் சரியான ஆலோசனை. அனேகரின் வீழ்ச்சிக்கு ஒரு காரணம், அவர்கள் தங்கள் திறமை மற்றும் ஆவிக்குரிய அனுபவத்தின் மேல் நம்பிக்கைக் கொண்டு பாலியல் இச்சைக்கு விலகி ஓடாமல் போராடிக் கொண்டிருந்ததாலேயே. பெரும் மனிதர்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

5. பாலியல் குறித்து இன்றும் பொதுவில் வெளிப்படையாக நாம் விவாதிக்க முடியாத சூழல் காணப்படுகிறது. இதனாலேயே அனேகர் தவறானவைகளையே முதல் பாடமாகப் பெற்றுவிடுகின்றனர். ஆனால் பரிசுத்த வேதாகமத்தில் நம் எல்லாக் கேள்விகளுக்கும் விடை உண்டு.

வேதாகம அடிப்படையில் அனேக நல்ல புத்தகங்கள் எழுதப்பட்டதுண்டு. அதில் எனக்கு மிகவும் பிடித்தமான புத்தகங்களுள் ஒன்று லெஸ்டர் சம்ரால் என்ற தேவ மனிதரால் எழுதப்பட்ட 60 THINGS GOD said about SEX. மற்ற புத்தகங்களைக் காட்டிலும் இப்புத்தகம் முழுக்க முழுக்க வேதாகமத்தையே மேற்கோள் காட்டி எழுதப்பட்டிருந்தது. தமிழில் அப்புத்தகத்தை வெளியிட எண்ணி இருந்தேன். அவர்கள் ராயல்டி கேட்டதால் என்னால் வெளியிட முடியாமல் போயிற்று.

Tuesday, December 27, 2011

கணனியும் கிருஸ்தவமும் ஒரு ஒப்பீடு

தற்பொழுது கணனி இன்றியமையாத பொருள்
அதனுடன் கிருஸ்தவர் எப்படி பொருந்துகின்றனர்
உள்ளே.......


கணனியின் பாகங்கள்                       கிருஸ்தவம்

 

 
  1. பவர் சப்ளை (smps)                                பிதா
  2. பிராசசர்                                                  இயேசு
  3. மதர்போர்டு                                             பரிசுத்தாவி
  4. ராம்                                                       சபை                                     
  5. ஹார்டிஸ்க்                                             மனிதன்
  6. கீபோட்                                                   சுவிஷேசம்
  7. மவுஸ்                                                   வேதாகமம்
  8. சிடி பிளாபி டிரைவ்                                  சுவிஷேசம் இரட்சிப்பு ஆராதனை
  9. ஆப்பரேட்டிங் சிஸ்டம்                              ஆத்துமா
  10. சாப்டுவேர்                                               பிரசங்கங்கள்
  11. வைரஸ்                                                  சாத்தான்
  12. பிரின்டர்                                                 ஆவியின் கனிகள்
  13. ஸ்கேனர்                                                இயேசுவை பிரதிபளிப்பது
  14. மானிட்டர்                                               சமூகம்
  15. ஸ்பீக்கர்                                               ஊழியம்

    கணனி எப்படி இயங்குகின்றதோ அதேபோன்று தான் கிருஸ்தவமும் இயங்குகிறது
  1. கணனிக்கு மிகமிக அவசியமான ஒன்று(SMPS) பவர் சப்ளை இது இல்லாவிட்டால் கணனி இயங்கவே முடியாது அவ்வாறாக இருப்பவர் பிதா
  2. பிராசசர் இது கணனியின் அனைத்துபகுதியையும் கட்டுபடுத்தும் மிகவும் முக்கிய பகுதி, அனைத்தையும் இயக்குவது இதுதான் இப்படியாக இருப்பவர் இயேசு
  3. மதர்போர்டு அனைத்து செயல்பாடுகளும் இதன் மூலமாக தான் நடத்தப்படுகிறது அல்லது பரிமாற்றம் செய்யபப்படுகிறது  இதுவும் அவசியமான ஒன்று இப்படியாக செயல்படுபவர் பரிசுத்தாவி
  4. ராம் இது தேவைக்கு எற்ப  மாறி இருக்கும் 128, 512 தற்பெழுது இன்னும் அதிகமாக உள்ளது இது கணனியின் தற்காலிக நினைவகம் காபி பெஸ்ட் செய்யபடுவது இதன் மூலமாகதான் இப்படி இருப்பது சபைகள்
  5. கணனியில் மிகவும் முக்கிய பகுதி ஹார்டிஸ்க் இதில்தான் நாம் அனைவரும் தகவல்களை சேமித்து வைக்கிறோம் மனிதனும் அந்த நிலையில்தான் செயல்படுகிறான்
  6. கீபோர்ட் மூலமாக அனைத்து தகவலும் தட்டச்சு செய்யப்படுகிறது அது போன்று மனிதனுக்கு சுவிஷேசம்மூலம் இரட்சிப்பின் தகவல் உள்செல்கிறது
  7. மவுஸ் என்பது  கம்பியூட்டரில் சுட்டுவதற்காக பயன்படுத்தபடுகிறது அது போன்று மனிதனின் அவல நிலைகளை சுட்டிகாட்டுகிறது வேதாகமம்
  8. சிடி பிளாபி டிரைவ் இவை கம்பியூட்டரில் தகவல் பரிமாற்றம் செய்ய பயன்படுத்தபடுகிறது இது போன்று சுவிசேசம் இரட்சிப்பு ஆராதனை விசுவாசம்... இவை மனிதனுக்கு ஆத்தும வளர்ச்சிபரிமாற்றத்தை தருகிறது
  9. ஆப்பரேட்டிங் சிஸ்டம் வின்டோஸ் 3.1 தொடங்கி 95 98 ME 2000 XP தற்பொழுது வின்டோஸ் வெஸ்ரா வரை வந்துள்ளது இது தவிர லினக்ஸ் மாக்.. போன்றவைகளும் உள்ளது இதன் மூலமாக தான் கம்பியூட்டரை பயன்படுத்த முடியும் இது மனிதனின் ஆத்துமா மற்றும் ஆத்தும வளர்ச்சியை குறிக்கும்
  10. சாப்டுவேர் நம் தேவைக்கு ஏற்ப உபயோகபடுத்தபடும் மென்பெருட்கள் இவை நமது தகவல்களை மெருகூட்டகூடியது இவ்வாறு நம் ஆத்தும வளர்ச்சிக்கு தேவைக்கு ஏற்ப பிரசங்கங்கள் நமக்கு அளிக்கபடுகிறது
  11. வைரஸ் இது நமது கம்பியூட்டரில் உள்ள அனைத்து தகவலையும் அழிக்கும் சில வைரஸ் ஹார்டிஸ்கை தாக்கி முற்றிலும் தகவல் இல்லாதவாறு செய்து விடும் அதனால் ஆண்டிவைரஸ் பயன்படுத்த வேண்டும் அதுவும் அவ்வப்போது அப்டேட் செய்ய வேன்டும் இதே போன்று தான் சாத்தான் நம்மை முற்றிலும் அழித்துவிடா வன்னம் காக்க ஜெபம் என்னும் ஆன்டிவைரஸ்சை அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும்
  12. பிரின்டர் நமது தகவல்களை அப்படியே வெளிபடுத்தி காட்டகூடியவை இதை போன்று நமது வாழ்வில் உள்ள ஆவியின் கனிகள் பிறருக்கு வெளிபடுத்தபடவேண்டும்
  13. ஸ்கேனர் நாம் கொடுக்கும் தகவல்களை அதாவது புகைபடம் அல்லது கடிதங்கள்  அப்படியே எடுத்து காட்டுவது அல்லது பிரதிபளிப்பது இவ்வாறு நாமும் இயேசுவின் அன்பை, குணங்களை பிரதிபளிக்கவேண்டும்
  14. மானிட்டர் (cpu)கம்பியூட்டரில் நடைபெறும் அனைத்தையும் நமது கண்களுக்கு பிரதிபளிக்க கூடியது இவ்வாறு நாம் கிருஸ்துவுடன் வாழும் வாழ்க்கையை சமூகத்தின் மூலம் பிரதிபளிக்கபடும்
  15. ஸ்பீக்கர் நாம் வைத்துள்ள (mp3 or more..)தகவல்களை ஒலியின் முலம் வெளிபடுத்தும் இவ்வாறு நாமும் நாம் பெற்ற இன்பம் இயேசுவை பெருக இவ்வையகம் என்று ஊழியம்செய்து வெளிபடுத்த வேன்டும்